ஒடிசா மாநில தலைநகர் புவனேசுவரத்தில், பா.ஜனதா கட்சியின் 2 நாள் தேசிய செயற்குழு கூட்டம் நேற்று தொடங்கியது. அதில், பிரதமர் நரேந்திர மோடி, பா.ஜனதா தலைவர் அமித் ஷா, மத்திய மந்திரிகள், பா.ஜனதா முதல்–மந்திரிகள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
கூட்டத்தில், மேற்கு வங்காளம், ஒடிசா போன்ற மாநிலங்களில் பா.ஜனதாவை வலுப்படுத்துவது பற்றி ஆலோசனை நடத்தப்பட்டது. 2019–ம் ஆண்டு நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலை சந்திக்க பா.ஜனதா பலவீனமாக உள்ள மாநிலங்களில் அதை வலுப்படுத்துவதன் அவசியம் பற்றி மூத்த தலைவர்கள் எடுத்துரைத்தனர். அதன் அடிப்படையில், தேர்தல் வியூகம் வகுப்பது பற்றி விவாதிக்கப்பட்டது.
இந்நிலையில் ஒடிசாவில் விடுதலை போராட்டத்தில் ஈடுபட்ட தியாகிகளின் குடும்பத்தினருக்கு பிரதமர் நரேந்திர மோடி மரியாதை செலுத்தினார். பைக்காவில் கிழக்கிந்திய கம்பெனிக்கு எதிராக போராடிய தியாகிகளின் குடும்பத்திற்கு பிரதமர் மரியாதை செலுத்தினார். இன்று 2-வது நாளாக புவேனேஷ்வரில் நடைபெற்று வரும் பாஜக செயற்குழு கூட்டத்தில் கலந்து கொண்டார்.
அப்போது பிரதமர் மோடி கூறியதாவது:
புதிய இந்தியாவை உருவாக்குவதில் வேகமாக முன்னேறி வருகிறோம். முத்தலாக் முறையால் முஸ்லிம் பெண்கள் சங்கடங்களை எதிர்கொள்கின்றனர். பா.ஜ.க.வின் வெற்றி களிப்பில் நாம் மெத்தனமாக இருந்துவிடக்கூடாது. பேச்சை குறைத்து கடுமையாக உழைக்க வேண்டும் என கூறினார்.