பிரதான செய்திகள்

முத்தரிப்புத்துறை கடற்படை சிப்பாய் தாக்குதல்! விசாரணை ஜனவரி 19ஆம் திகதி

மன்னார் முசலி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட  முத்தரிப்புத்துறை பகுதியில், கடற்படை சிப்பாய்கள் மீது மேற்கொள்ளப்பட்ட  தாக்குதல் சம்பவம் தொடர்பிலான  வழக்கு விசாரணையை,  ஜனவரி மாதம் 19 ஆம் திகதி வரை, மன்னார் மாவட்ட பதில் நீதவான் இ.கயஸ் பெல்டானோ (8) ஒத்திவைத்தார்.

முசலி பிரதேசச் செயலாளர் பிரிவுக்குற்பட்ட மீனவ கிராமமான முத்தரிப்புத்துறை கிராமத்தில், கடந்த ஒக்டோபர் மாதம்  18 ஆம் திகதி இரவு, வீட்டுக்குள் செல்ல முற்பட்ட நபரை, அருகில் உள்ள பற்றையில் மறைந்திருந்த நிலையில்,  கிராம மக்கள் பிடித்து தாக்கினர்.

தாக்கப்பட்டவர்கள் கடற்படைச் சிப்பாய்கள் என்று பின்னர் தெரியவந்ததுடன், அவர்கள் மீது தாக்குதல்களை மேற்கொண்டார்கள் என்ற குற்றச்சாட்டில், குறித்த முத்தரிப்புத்துறை கிராமத்தைச் சேர்ந்த 11 பேருக்கு எதிராக சிலாபத்துறை பொலிஸார், மன்னார் நீதிமன்றத்தில் வழக்குத்தாக்கல் செய்தனர்.

சந்தேகநபர்கள் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டதுடன், வழக்கு விசாரணைகள் நடைபெற்ற வருகின்றன.

Related posts

மெல்கம் ரஞ்ஜித் அவர்களை சந்தித்த முஸ்லிம் அரசியல்வாதிகள்

wpengine

முல்லைத்தீவு மாவட்டத்தில் விசுவநாதர் ஆரம்ப பாடசாலை முதலிடம்

wpengine

பொதுச் செயலாளர் பதவியிலிருந்து விலகினார் ஹசன் அலி.!

Maash