பிரதான செய்திகள்

முதியோர் போட்டிகள் வவுனியாவில்

வவுனியா மாவட்ட மட்டத்திலான முதியோருக்கான விளையாட்டுப் போட்டிகள் இன்று வவுனியா மாவட்ட சமூகசேவை அலுவலகத்தில் நடைபெற்றுள்ளன.

எதிர்வரும் ஒக்டோபர் மாதம் முதலாம் திகதி முதியோர் தினம் கொண்டாடப்படவுள்ள நிலையிலேயே இந்த போட்டிகள் மாவட்ட சமூகசேவை உத்தியோகத்தர் எஸ்.ஸ்ரீநிவாசன் தலைமையில் நடத்தப்பட்டுள்ளன.

 

இதன்போது, வவுனியா யங்ஸ்ரார் விளையாட்டு மைதானத்தில் வேகநடை போட்டியும், ஏனைய போட்டிகள் அலுவலக வளவிலும் நடைபெற்றுள்ளன.

இந்த போட்டியில் வவுனியா வடக்கு, வவுனியா நகரம், வவுனியா தெற்கு பிரதேச செயலகம் சார்ந்த முதியோர்கள் பங்குபற்றியிருந்தனர்.
சமூகசேவை உத்தியோகத்தர்களான ந.பாலகுமார், விமலேந்திரன், ச.சோபனா ஆகியோரும் அபிவிருத்தி உத்தியோகத்தர்களான தி.கலைவாணி, ஜே. செல்வமலர், எஸ்.கலைவாணி, ப.கோமளா, எஸ்.கே.வசந்தன் ஆகியோர் நிகழ்வுகளை ஒருங்கிணைத்து நடத்தியிருந்தனர்.

Related posts

குவைத் அரசு நிதி மூலம்! 66 பாலங்களை புனரமைக்க நடவடிக்கை அமைச்சர் ஜோன்ஸ்டன்

wpengine

இணைய முகவரி ஊடாக தேர்தல் முறைப்பாடு

wpengine

அமைச்சர் ஹக்கீமினால் வழங்கப்பட்ட சட்ட முரணான தொழில் விசாரணை

wpengine