பிரதான செய்திகள்

முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் வைத்தியசாலையில் சிகிச்சை

செல்வநாயகம் கபிலன்

வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், திடீர் உடல்நலக் குறைவு காரணமாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை, இருதய நோய் சிகிச்சை பிரிவில் இன்று திங்கட்கிழமை (25) சிகிச்சை பெற்றார்.

முதலமைச்சருக்கு இருதய நோய் இருப்பதன் காரணமாக அவர் கடந்த காலங்களிலும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டார்.

இந்நிலையில், இன்றும் சிகிச்சை பெறுகின்றார். அவர் விடுதியில் அனுமதிக்கப்படவில்லையெனவும், சிகிச்சை மாத்திரம் பெற்றார் என வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.

முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனின் உடல்நலக் குறைவால், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோருக்கு இடையில் கடந்த 18 ஆம் திகதி நடைபெறவிருந்த சந்திப்பும் தடைப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

 

Related posts

யாழ்ப்பாணத்தில் வாழ்வெட்டு! தேர்தல் தெரிவத்தாட்சி அலுவலகம் முன்பாக

wpengine

வவுனியா இறம்பைக்குளம் அந்தோனியார் தேவாலயத்தில் விஷேட ஆராதனை!

Editor

2022 ல் புதிய அரச ஊழியர்கள் இல்லை வாகனம் இறக்குமதி தடை -பசில்

wpengine