பிரதான செய்திகள்

முதலமைச்சருக்கு எதிராக கவனயீர்ப்புப் போராட்டம்

மத்திய அரசின் கிராமிய பொருளாதார அமைச்சினால் வவுனியாவில் அமைப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ள பொருளாதார மையத்தை தாண்டிக்குளம் விவசாய பண்ணையின் பயன்படுத்தப்படாத காணியில் அமைப்பதற்கு முதலமைச்சர் அனுமதி வழங்க வேண்டும் என தெரிவித்து வவுனியாவில் இன்று அமைதிப்போரணியொன்று  முன்னெடுக்கப்பட்டது.

வவுனியா உள்ளூர் விளைபொருள் விற்பனையாளர் சங்கம் ஏற்பாடு செய்திருந்த  இந்த அமைதிப்பேரணியில், அபிவிருத்தியில் அரசியல் கலக்காதே, வலியவரும் வாய்ப்பை நழுவ விடாதே, மத்தியா மாகாணமா இதுவல்ல எமது பிரச்சனை மாவட்டத்தின் அபிவிருத்தியே, சந்தை வாப்பில்லாமல் நாம் படும் துன்பம் தெரியுமா, தரவில்லை என்று குறை கூறாமல் தந்ததை பயன்படுத்து, வேண்டாம் வேண்டாம் பொய்யான அறிக்கைகள் வேண்டாம் என்ற வாசகங்கள் எழுதப்பட்ட பதாதைகளைபேரணியில் கலந்துகொண்டவர்கள் தாங்கியிருந்தனர்.13174164_1013483258740854_5196351088595773524_n

இதேவேளை இவ் ஆர்ப்பாட்டத்தில் வன்னி நாடாளுமன்ற உறுப்பினரான சி. சிவமோகன், முன்னாள் வன்னி பாராளுமன்ற உறுப்பினர் வினோ நோகதாரலிங்கம், ஐக்கிய தேசியக் கட்சியின் வவனியா மாவட்ட அமைப்பாளர் கருணாதாச மற்றும் பலர் கலந்துகொண்டனர்.13124997_1013477312074782_2781586888534768596_n

Related posts

நல்லிணக்கப் பொறிமுறை! மன்னார் முஸ்லிம்களின் பிரச்சினைகள்

wpengine

தொலைபேசி மற்றும் பேஸ்புக்கு தடை விதித்த மைத்திரி

wpengine

வடக்கு மாகாணத்தின் அனைத்து அலுவலகங்களுக்கும் விடுமுறை

wpengine