பிரதான செய்திகள்

முட்டைக்கான அதிகபட்ச சில்லறை விலையை நீக்க நடவடிக்கை!

முட்டைக்கான அதிகபட்ச சில்லறை விலையை நீக்குவது குறித்து அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.

முட்டை உற்பத்தியாளர்கள், கோழிப்பண்ணையாளர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு இடையில் பிரதமர் அலுவலகத்தில் இடம்பெற்ற விசேட கலந்துரையாடலின் போது இது தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

ஜனாதிபதியின் செயலாளர், விவசாய மற்றும் வர்த்தக அமைச்சுக்களின் செயலாளர்கள் தலைமையில் இந்த கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது.

கோழி மற்றும் முட்டைத் தொழிலில் தற்போது ஏற்பட்டுள்ள சிக்கல் நிலை தொடர்பில் இதன்போது நீண்ட கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

முட்டைக்கு வழங்கப்படும் அதிகபட்ச சில்லறை விலையை நீக்க நடவடிக்கை எடுத்தால் 15 நாட்களுக்குள் சந்தையில் முட்டை தட்டுப்பாட்டை போக்க முடியும் என தொழில்துறையினர் சுட்டிக்காட்டியுள்ளனர்.

Related posts

வெளிநாடு செல்வோருக்கு மகிழ்ச்சியை கொடுத்த ஜனாதிபதி கோத்தாபாய

wpengine

கிழக்கு சுதந்திர ஊடகவியலாளர் ஒன்றியத்தின் இப்தாரும் முஸ்தபா நினைவுப் பேருரையும்

wpengine

ரணில்,மைத்திரி மோதல் மீண்டும் ஆரம்பம்

wpengine