அரசியல்செய்திகள்பிரதான செய்திகள்

முடியுமானால் எங்களை தோற்கடித்து காட்டுங்கள். அதற்காக மக்களுக்கு சந்தர்ப்பத்தை வழங்குவோம்.

ரமழான் காலத்தில் உள்­ளூ­ராட்சி மன்ற தேர்தல் இடம்­பெ­றாது என நினைக்­கிறேன். அதே­போன்று  பரீட்சை காலத்­திலும் நோன்பு காலத்­திலும் தேர்தல் இடம்­பெற்ற வர­லாறு எமது நாட்டில் இருக்­கி­றது என தேசிய ஒரு­மைப்­பாடு பிரதி அமைச்சர் முனீர் முழப்பர் தெரி­வித்தார். பாரா­ளு­மன்­றத்தில் இடம்­பெற்ற உள்­ளூ­ராட்சி அதி­கா­ர­ச­பைகள் விசேட ஏற்­பா­டுகள் சட்­ட­மூ­லத்தின் மீதான விவா­தத்தில் கலந்­து­கொண்டு உரை­யாற்­று­கை­யி­லேயே இவ்­வாறு தெரி­வித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து உரை­யாற்­று­கையில்,

உள்­ளூ­ராட்சி மன்ற தேர்­தலை கடந்த அர­சாங்கம் திட்­ட­மிட்டு பிற்­ப­டுத்தி வந்­தது. அன்று ஜனா­தி­ப­தியின் கட்­சியும் உள்­ளூ­ராட்சி மன்ற தேர்­த­லுக்கு வேட்­பு­மனு தாக்கல் செய்­தி­ருந்த நிலையில், ஜனா­தி­பதி பாரா­ளு­மன்­றத்­துக்கு வந்து, தேர்தல் பிற்­ப­டுத்­தப்­ப­டவும் இல்லை, பிற்­ப­டுத்­து­வ­தற்கு தேர்­தலும் இல்லை என்றே தெரி­வித்தார்.

இந்த தேர்­தலை நடத்­தாமல் பிற்­ப­டுத்­தி­யதால் பாதிக்­கப்­பட்ட கட்­சிகள் தேர்­தலை நடத்­து­வ­தற்­காக நீதி­மன்ற உத­வியை நாடிச்­சென்­றன.எமது நாட்டின் வர­லாற்றில் அதி­கா­ரத்தில் இருந்த அர­சாங்­கங்கள் அதி­கா­ரத்தை தக்­க­வைத்­துக்­கொள்­வ­தற்­காக தேர்­தலை பிற்­ப­டுத்தி வந்­தி­ருக்­கி­றது அல்­லது தேர்­தலை கட்டம் கட்­ட­மாக நடத்­திய வர­லாறு இருக்­கி­றது.

அன்று உள்­ளூ­ராட்­சி­மன்ற தேர்தல் தொடர்­பான எதிர்­பார்ப்பு இல்­லாமல் போன­போது எதிர்க்­கட்­சிகள் அதற்கு எதி­ராக ஊட­கங்­க­ளுக்கு முன்னால் கடும் எதிர்ப்பை வெளி­யிட்­டி­ருந்­தன. ஆனால் அன்று தனது தலைவர் தேர்­தலை நடத்­தாமல் இருப்­ப­தற்கு நட­வ­டிக்கை எடுத்­த­போது அதற்கு எதி­ராக குரல்­கொ­டுக்­காமல் இருந்­த­வர்கள் இன்று  உள்­ளூ­ராட்சி மன்ற தேர்­தலை நடத்­து­வ­தற்கு அர­சாங்கம் நட­வ­டிக்கை எடுக்­கும்­போது அதற்கு எதி­ராக கருத்து தெரி­விக்­கின்­றனர்.

அத்­துடன் உள்­ளூ­ராட்சி மன்ற தேர்­தலை ரமழான் மாதத்தில் நடத்­தப்­போ­வ­தாக சிலர் தெரி­வித்து வரு­கின்­றனர். எனினும் உள்­ளூ­ராட்சி மன்ற தேர்தல் ரமழான் மாதம் இடம்­பெ­றாது. அதற்கு பின்­னரே இடம்­பெறும் என நினைக்­கிறேன். ஆனால் 2000ஆம் ஆண்டு ஒக்­டோபர் 10ஆம் திகதி ரமழான் நோன்பு 8இல் நாட்டில் பொதுத் தேர்தல் நடத்­தப்­பட்­டி­ருக்­கி­றது. அதே­போன்று பரீட்சை காலத்தில் தேர்­தலை நடத்­து­வ­தாக தெரி­விக்­கின்­றனர். ஆனால் கடந்த காலங்­களில் பரீட்சை இடம்­பெறும் காலத்­திலும் தங்­களின் அதி­கா­ரத்தை உறு­திப்­ப­டுத்­திக்­கொள்ள தேர்­தலை நடத்­திய வர­லாறு இருக்­கி­றது.

மேலும் இந்த அர­சாங்கம் 6 மாதங்களில் தோல்வியடையும் என சிலர் தெரிவித்தனர். அடுத்த மாதமாகும்போது அரசாங்கத்துக்கு 6மாதமாகிறது. அதனால் அடுத்த தேர்தலில் முடியுமானால் எங்களை தோற்கடித்து காட்டுங்கள். அதற்காக மக்களுக்கு சந்தர்ப்பத்தை வழங்குவோம் என்றார்.

Related posts

வவுனியாவில் 50மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கிய அரசாங்க அதிபர்

wpengine

பல்கலைக்கழக அனுமதிக்கான விண்ணப்பம் நீடிக்க வேண்டும்

wpengine

வில்பத்து பற்றி பேசிய இந்த அரசுதான்! காடுகளை அழிக்க வேண்டும் என கூறுகிறது.

wpengine