அரசியல்செய்திகள்பிரதான செய்திகள்

முடிந்தால் 1350 ரூபாவிலிருந்து 1 ரூபா அடிப்படை சம்பளத்தை அதிகரித்துக் காட்டுங்கள், ஜீவன் சவால்.!

பெருந்தோட்டத் தொழிலாளர்களின் அடிப்படை சம்பளத்தை 1350 ரூபாவிலிருந்து ஒரு ரூபாவை அதிகரித்து காட்டுமாறு நாடாளுமன்ற உறுப்பினர் ஜீவன் தொண்டமான் சவால் விடுத்துள்ளார்.

வரவு – செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது,

”1700 ரூபா சம்பளத்தை பெற்றுக்கொடுக்க நாம் நடவடிக்கையெடுத்த போது தேசிய மக்கள் சக்தியினர் எம்மை விமர்சித்தனர். 2234 ரூபா சம்பளத்தை பெற்றுக்கொடுக்க வேண்டும் என்றனர். ஆனால், தற்போது 1700 ரூபாவை பெற்றுக்கொடுக்க நடவடிக்கையெடுக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி கூறியதை கைத்தட்டி வரவேற்கின்றனர்.

அது எவ்வாறு? நாம் கூறும் போது அதனை கடுமையாக எதிர்த்தனர். தற்போது வரவேற்கின்றனர். மனசாட்சியுடன் நடந்துக்கொள்ள வேண்டும். ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுக்கு ஒரு சவாலை விடுகிறேன். முடிந்தால் 1350 ரூபாவிலிருந்து 1 ரூபா அடிப்படை சம்பளத்தை அதிகரித்துக் காட்டுங்கள். பெருந்தோட்ட நிறுவனங்கள் தொடர்பில் எமக்கு தெரியும்.

கடந்த அரசாங்கம் மற்றும் என்னை விமர்சித்தால் மலையக மக்களின் வாழ்க்கையில் எந்தவித மாற்றமும் ஏற்பட போவதில்லை. மக்களுக்கு நன்மைகளை செய்யுங்கள். அதற்கு நாமும் உதவி செய்கிறோம். ” என்றார்.

Related posts

அனர்த்த பாதிப்பு பகுதிகளில் தொடர்ந்தும் அசா­தா­ரண நிலை மீட்பு, நிவா­ரண பணிகள் துரிதம்

wpengine

புத்தர் சிலை விவகாரம்! நல்லாட்சிக்கு களங்கத்தை ஏற்படுத்துகின்றது.

wpengine

காதல் கல்யாணம் பிரிவுக்கு சமந்தாவின் ஆடை வடிவமைப்பாளர்

wpengine