மியன்மார் தூதரகத்திற்கு சென்று சண்டித்தனம் காண்பித்த முஜிபுர் ரஹ்மானுக்கு சீன, அமெரிக்க, பிரித்தானிய தூதரகங்களுக்கு சென்று சண்டித்தனம் காண்பிக்க முடியுமா? என பொது பல சேனா அமைப்பு சவால் விட்டது.
அத்துடன் அம்பாந்தோட்டை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோருக்கு ஒரு சட்டம், மியன்மார் தூதரகத்திற்கு சென்று போராடியவர்களுக்கு வேறு சட்டமா என்றும் அவ்வமைப்பு கேள்வி எழுப்பியது.
இராஜகிரியவில் அமைந்துள்ள பொது பல சேனா அமைப்பின் காரியாலயத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்து கொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவ்வமைப்பின் நிர்வாக பணிப்பாளர் டிலந்த விதானகே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அங்கு டிலந்த விதானகே மேலும் குறிப்பிடுகையில்,
நிதி ஒதுக்கீட்டு சட்டமூலத்தின் பிரகாரம் பாதுகாப்பு அமைச்சிற்கு அதிக நிதி ஒதுக்கீடு செய்யப்படுகின்றது. யுத்தம் நிறைவடைந்தும் அதற்கே அதிக நிதி ஒதுக்கீடு செய்யப்படுகின்றது. நாட்டின் போக்குவரத்து ,சுகாதாரம் சீர்குலைந்துள்ளன. எனினும் அது தொடர்பில் அவதானம் செலுத்தப்படுவது குறைவு.
அத்துடன் தற்போது அரசியலமைப்பு தொடர்பில் எவருக்கும் புரிந்துணர்வு கிடையாது. இந்நிலையில் இதுவரைக்கும் வரவு செலவின் துண்டுவிழும் தொகையை சீர் செய்ய முடியாதவர்கள் எப்படி அரசியலமைப்பின் ஊடாக பிரச்சினை தீர்க்க போகின்றார்கள்.
மியன்மார் தூதரகத்திற்கு சென்று சண்டித்தனம் காண்பித்த முஜிபுர் ரஹ்மானுக்கு சீன, அமெரிக்க, பிரித்தானிய தூதரகங்களுக்கு சென்று சண்டித்தனம் காண்பிக்க முடியுமா?
அத்துடன் அம்பாந்தோட்டை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோருக்கு ஒரு சட்டம், மியன்மார் தூதரகத்திற்கு சென்று போராடியவர்களுக்கு வேறு சட்டமா என்றும் அவ்வமைப்பு கேள்வி எழுப்பியுள்ளது.