முச்சக்கர வண்டிகள் தேவைக்கும் அதிகமாக இருப்பதால் அவற்றை இறக்குமதி செய்வதை கட்டுப்படுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக போக்குவரத்து அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.
நேற்று இடம்பெற்ற, பாதுகாப்புடனான நவீன முச்சக்கர வண்டி ஒன்றை அறிமுகப்படுத்தும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இந்நிலையில் முச்சக்கர வண்டிகளில் பாதுகாப்பு குறைபாடு காணப்படுவதாகவும் அவற்றை நிவர்த்தி செய்வது அரசாங்கத்தின் கடமையெனவும் அவர் தெரிவித்தார்.
இதேவேளை முச்சக்கர வண்டிகளில் ஆசணப்பட்டி அமைக்கப்பட வேண்டும் என்று பாராளுமன்ற சட்டமூலம் ஒன்றை கொண்டு வர நடவடிக்கை எடுக்க உள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.