செய்திகள்பிரதான செய்திகள்

முச்சக்கரவண்டியினுள் வைத்து ஒருவர் வெட்டிக் கொலை..!

இரத்தினபுரியில் கிரிஎல்ல பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கொட்டபெத்தாவ பிரதேசத்தில் முச்சக்கரவண்டியினுள் வைத்து ஒருவர் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளதாக கிரிஎல்ல பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த கொலை சம்பவம் இன்று புதன்கிழமை (18) அதிகாலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கொலை செய்யப்பட்டவர் தொடர்பில் இதுவரை எந்தவித தகவல்களும் கிடைக்கவில்லை என பொலிஸார் தெரிவித்தனர்.

கொலைக்கான காரணம் இதுவரை கண்டறிப்படவில்லை எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் தொடர்பில் சந்தேக நபர்கள் எவரும் இதுவரை கைதுசெய்யப்படவில்லை என பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கிரிஎல்ல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts

இந்த ஆண்டு வரிகளைக் குறைப்பதற்கு எவ்வித சாத்தியம் இல்லை.!

Maash

உலக பணக்கார நாடுகள் பட்டியலில் அமெரிக்காவை பின்தள்ளி சீனா முதலிடம்

wpengine

விக்னேஸ்வரன்,சம்பந்தன் போன்றோரின் இனிப்புகளுக்கு முஸ்லிம்கள் ஏமாற மாட்டார்கள்

wpengine