நேற்று மன்னார் கச்சேரியில் இடம்பெற்ற மாவட்ட அபிவிருத்திக்குழுக் கூட்டத்தில் முசலி- கொண்டச்சி பாம்படிச்சான் ஓடை உட்பட முசலிப் பிரதேசத்தின் எந்தவொரு கடற்பிரதேசத்திலும் நீர்கொழும்பு பருவகால மீனவர்கள் நிரந்தரமாகக் குடியேறி மீன்பிடித்தொழில் செய்ய முடியாது, என்றும் அவர்கள் விரும்பினால் வழமை போன்று சிலாவத்துறையில் தற்காலிகமாகத் தங்கிநின்று தொழில் செய்துவிட்டுச் செல்லலாம் என்றும் அமைச்சர் ரிசாட் பதியுதீன் தெரிவித்தார்.
அமைச்சரின் இம்முடிவு மன்னார் மாவட்ட அபிவிருத்திக்குழுக் கூட்டத்தின் முடிவாக அங்கீகரிக்கப்பட்டு கடந்த சில வாரங்களாக இழுபறி நிலையில் இருந்து வந்த முசலி மீனவர் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு காணப்பட்டுள்ளது.