Breaking
Mon. Nov 25th, 2024

ஜனா­தி­ப­தியின் மாவில்லு பேணற்­காடு வர்த்­த­மானி பிர­க­டனம் தொடர்­பாக அவ­ரது பணிப்­பு­ரையின் பேரில் எதிர்­வரும் 13 ஆம் திகதி ஜனா­தி­ப­தியின் செய­லா­ள­ருடன் நடத்­தப்­ப­ட­வுள்ள பேச்­சு­வார்த்­தையில் சுமு­க­மான தீர்­வொன்று கிடைக்­கா­விட்டால் அதற்­கெ­தி­ராக நாம் போராட்­டங்­களை நடத்­துவோம் என ஸ்ரீ லங்கா தௌஹீத் ஜமா­அத்தின் முன்னாள் பொதுச் செயலாளர் அப்துர் ராஸிக் தெரி­வித்தார்.

முஸ்­லிம்­களின் பூர்­வீக காணி வன­பி­ர­தே­சத்­துக்கு அவ­சி­ய­மென்றால் அதற்குப் பதி­லாக அர­சாங்கம் மாற்றுக் காணிகள் வழங்க நட­வ­டிக்கை எடுக்­க­வேண்­டு­மெ­னவும் வேண்­டுகோள் விடுத்தார். நேற்­றுக்­காலை கொழும்பு ஸ்ரீ லங்கா தௌஹீத் ஜமா­அத்தின் தலைமைக் காரி­யா­ல­யத்தில் நடை­பெற்ற ஊடக மாநாட்டில் கலந்­து­கொண்டு உரை­யாற்­று­கை­யி­லேயே இவ்­வாறு கூறினார்.

அவர் தொடர்ந்தும் உரை­யாற்­று­கையில்;

வில்­பத்து பிர­தே­சத்தில் முசலி பிர­தேச சபை பிரிவில் முஸ்­லிம்கள் தங்­க­ளது பூர்­வீக காணி­க­ளிலே குடி­யே­றி­னார்கள்.

அவர்கள் வில்­பத்து வன­பி­ர­தே­சத்தை அழிக்­க­வில்லை. யுத்தம் முடி­வுக்கு வந்­ததன் பின்பு மீள தங்­க­ளது பூர்­வீக காணி­க­ளுக்கு வந்த மக்கள் காடு­க­ளா­கி­யி­ருந்த தமது காணி­க­ளையே சுத்தம் செய்­தார்கள்.

2012 ஆம் ஆண்டு மற்றும் 2017 ஆம் ஆண்டின் ஜனா­தி­ப­தியின் மாவில்லு பேணற்­காடு வர்த்­த­மானி பிர­க­டனம் என்­ப­வற்­றினால் முஸ்­லிம்­களின் பூர்­வீக காணிகள் அவர்­க­ளது விவ­சாய நிலங்கள் வன பிர­தே­சத்­தோடு இணைக்­கப்­பட்­டுள்­ளது. இதனால் முஸ்­லிம்கள் பாதிக்­கப்­பட்­டுள்­ளார்கள். அவர்­க­ளது வாழ்­வா­தாரம் பாதிக்­கப்­பட்­டுள்­ளது.

இரா­ணுவம் மற்றும் கடற்­படை தமது தேவை­க­ளுக்­காக முஸ்­லிம்­களின் பூர்­வீகக் காணி­களை சுவீ­க­ரித்­துள்­ளன. நடுக்­காட்டில் இரா­ணு­வமே காட­ழித்து பாதை­யொன்­றினை அமைத்­துள்­ளது. இந்த பாதை­யோ­ர­மாக தங்­க­ளது காணி­க­ளிலே முஸ்­லிம்கள் குடி­யே­றி­யுள்­ளார்கள். இப்­ப­கு­தி­களில் 40 வரு­டங்­க­ளுக்கு முன்­பி­ருந்தே முஸ்­லிம்கள் வாழ்ந்­தி­ருக்­கி­றார்கள்.

வில்­பத்து வன பிர­தேச எல்­லையில் பூங்­குளம் என்று ஒரு மீனவ கிராமம் இருக்­கி­றது. இங்கு கிறிஸ்­த­வர்கள் வாழ்­கி­றார்கள். இங்கு அர­சாங்க பாட­சா­லை­யுள்­ளது. கிராம சேவ­கரும் கட­மை­யாற்­று­கிறார். தற்­போது இங்கு அர­சாங்­கத்­தினால் 11 வீடுகள் புதி­தாக நிர்­மா­ணிக்­கப்­பட்டு வரு­கின்­றன. இக்­கி­ராம மக்கள் காட­ழித்­தார்கள்.

என்று குற்றம் சுமத்­தப்­ப­ட­வில்லை. மறி­ச்சுக்­கட்டி, சிலா­வத்­துறை எனும் பிர­தே­சங்கள் முசலி பிரே­தேச சபையின் கீழ் உள்­வாங்­கப்­பட்­டுள்­ளன. இப்­ப­கு­திகள் மாவில்லு பேணற்­காடு வர்த்­த­மானி பிர­க­ட­னத்தில் உள்­ள­டக்­கப்­பட்­டுள்­ளது. இதே­வேளை, பூங்­குளம் கிராமம் புத்­தளம் பிர­தேச சபையின் கீழ் இணைக்­கப்­பட்­டுள்­ளது. எனவே முஸ்­லிம்கள் வேண்­டு­மென்றே பாதிப்­புக்­குள்­ளாக்­கப்­பட்­டுள்­ளார்கள். ஏன் இந்த ஓரக்கண் பார்வை. பூங்­குளம் மக்கள் காட­ழித்­தார்கள் என்று குற்றம் சுமத்­தப்­ப­ட­வில்லை.

இரா­ணுவம் மற்றும் கடற்­படை பாது­காப்பு கருதி முஸ்­லிம்­களின் காணி­களை சுவீ­க­ரித்­தாலும் அவர்­க­ளுக்கு மாற்­றுக்­காணி வழங்க எந்­த­வித ஏற்­பா­டு­க­ளையும் செய்­ய­வில்லை. இதனால் முஸ்­லிம்கள் தாம் வாழ்ந்த பகுதிக் கருகில் உள்ள காணி­க­ளிலே குடி­யேறும் நட­வ­டிக்­கை­களை முன்­னெ­டுத்­தார்கள். அக்­கா­ணி­களும் அவர்­க­ளுக்­கு­ரி­யதே.

ஜனா­தி­பதி, யுத்­தத்­தினால் பாதிக்­கப்­பட்டு இடம்­பெ­யர்ந்த முஸ்­லிம்­களை அவர்­க­ளது பூர்­வீக காணி­களில் மீள் குடி­யேற்ற உட­ன­டி­யாக நட­வ­டிக்­கை­களை மேற்கொள்ள வேண்டும். கடற்படை மற்றும் இராணுவத்தினால் சுவீகரிக்கப்பட்ட காணி உரிமையாளர்களுக்கு மாற்றுக் காணி வழங்கப்பட வேண்டும்.

முசலி பிரதேச சபை பிரிவில் நிர்மாணிக்கப்பட்டுள்ளஜாசிம்நகர், ஹுனைஸ் நகர் ஆகிய குடியேற்றங்கள் அரச அனுமதியுடனே நிர்மாணிக்கப்பட்டன. அக் குடியேற்றங்கள் அரபுக்கொலனிகள் என்று குற்றம் சுமத்தப்படுவது தவறாகும்.
மது தொழிற்­சா­லைக்கு எதி­ராக ஆர்ப்­பாட்டம் 
மக்­களை மது­வி­லி­ருந்தும் காப்­பாற்ற வேண்டும் என்று கூறும் அரசு மட்­டக்­க­ளப்பு – கல்­கு­டாவில் நிர்­மா­ணிக்­கப்­பட்டு வரும் மது உற்­பத்தித் தொழிற்­சா­லையை உடன் நிறுத்த வேண்டும். இல்­லையேல் விரைவில் மட்­டக்­க­ளப்பில் இதற்கு எதி­ராக பாரிய ஆர்ப்­பாட்­டங்­களை நடத்­துவோம் என ஸ்ரீ லங்கா தௌஹீத் ஜமா­அத்தின் தலைவர் எம்.எப். ரஸ்மின் தெரி­வித்தார்.

‘சிறு­பான்­மை­யினர் பெரும்­பான்­மை­யாக வாழும் மட்­டக்­க­ளப்பு மாவட்­டத்தில் கல்­கு­டாவில் மது­பான தொழிற்­சாலை அமை­வதால் மக்­களின் சக­வாழ்வு, கலை, கலா­சாரம், கல்வி உட்­பட அனைத்து துறை­களும் அழி­வுக்­குள்­ளாகும். இங்கு முஸ்லிம் பள்­ளி­வா­சல்கள், கோயில்கள், ஆல­யங்கள், பன்­ச­லைகள் இருக்­கின்­றன. மதஸ்­த­லங்­க­ளுக்கும் சவால்கள் ஏற்­படும். மட்­டக்­க­ளப்பு பிர­தே­சத்தில் மது­பான விலை­யிலும் வீழச்­சி­யேற்­படும். இதனால் மக்கள் மதுவின் பால் ஈர்க்­கப்­ப­டு­வார்கள்.

கல்­கு­டாவில் மது உற்­பத்தி தொழிற்­சாலை நிறு­வு­வ­தற்கு பிர­தேச செய­லாளர் மற்றும் மாகாண சபையின் அனு­மதி பெற்­றுக்­கொள்­ளப்­ப­ட­வில்லை. மத்­திய அர­சாங்­கத்தின் ஆத­ர­வுடன் அங்கு மது­பான தொழிற்­சாலை நிர்­மா­ணிக்­கப்­பட்டு வரு­கி­றது. தொழில் வாய்ப்­பு­களை உரு­வாக்­கு­வ­தற்­கா­கவே நிர்­மா­ணிக்­கப்­ப­டு­கி­றது என்று நியாயம் கூறப்­ப­டு­கி­றது.

அனைத்து சம­யங்­களும் மது­பான பாவ­னையை எதிர்க்­கின்­றன. இஸ்லாம் மது­பா­வ­னையை கடு­மை­யாகக் கண்­டிக்­கி­றது. மது­பா­ன­சாலை நிர்­மாணம் ஆரம்­பிக்­கப்­ப­டுவ­தற்கு ஒரு மாத காலத்­திற்கு முன்பே ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன போதைப்­பொ­ரு­ளுக்கு எதி­ரான மாநாட்டை கிழக்கில் நடத்­தினார். அடுத்த மாதம் கிழக்கில் மது­பா­ன­சாலை நிர்­மாணம் ஆரம்­பிக்­கப்­பட்­டது. இது வேடிக்­கை­யா­ன­தாகும்.

சிறு­பான்மை மக்­களின் பங்­க­ளிப்­புடன் ஆட்­சிக்கு வந்த நல்­லாட்சி அர­சாங்கம் சிறு­பான்மை மக்­களை அழி­வின்பால் இட்­டுச்­செல்லும் மது­பான தொழிற்­சா­லையை கிழக்கில் நிர்­மா­ணிக்க அனு­மதி வழங்­கி­யுள்­ளமை கண்டிக்கத்தக்கதாகும். அரசாங்கத்துக்கு பெரும் வரி செலுத்தப்படுகிறது என்பதற்காக அர்ஜுன மகேந்திரனின் உறவினருக்கு இதற்கான அனுமதிப்பத்திரம் வழங்கப்பட்டுள்ளதன் பின்னணியில் அரசியல் சக்திகளே செயற்பட்டுள்ளன என்றார்.

vanni

By vanni

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *