பிரதான செய்திகள்

முசலி மக்களின் 7வது நாள் கவனயீர்ப்பு போராட்டம்! ஆதரவு வழங்கிய அடைக்கலம் நாதன்,டெனீஸ்வரன்,சிவாஜிலிங்கம்

(எஸ்.எச்.எம்.வாஜித்)

மன்னார் மாவட்டத்தில் முசலி பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள சுமார் 100000க்கும் மேற்பட்ட காணிகளை  அரசாங்கம் சுவீகரிக்கும் நோக்குடன் வெப்பல்,மாவில்லு மரிச்சுக்கட்டி ,கரடிக்குழி மற்றும் பாலைக்குழி இன்னும் பல இடங்களை வில்பத்து பிரதேசமாக அதிமேதகு ஜனாதிபதி வர்த்தகமானி அறிவித்தலை வெளியீட்டுள்ளார். 

இதனை கண்டித்தும்,வர்த்தகமானி அறிவித்தலை ரத்து செய்ய கோரியும் முசலி பிரதேசத்தில் உள்ள மக்கள் சுழற்சி முறையில் இன்றுடன் 7வது நாளாக கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னேடுத்து வருகின்றார்கள்.

இந்த மக்களின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் முகமாக இன்று காலை தமிழ் தேசிய கூட்டமைப்பின்  பாராளுமன்ற உறுப்பினர்களின் குழுக்களின் தலைவரும்,பாராளுமன்ற உறுப்பினருமான  செல்வம் அடைக்கலம் நாதன்,வடமாகாண போக்குவத்து அமைச்சர் டெனீஸ்வரன்,மாகாண சபை உறுப்பினர் சிவாஜிலிங்கம் கலந்துகொண்டு இவர்களின் பிரச்சினைகளை கேட்டுக்கொண்டனர்.

இவர்கள் தொடர்ந்து தெரிவிக்கையில்;

இந்த கவனயீர்ப்பு போராட்டத்திற்கு எங்களுடைய முழு ஆதரவுகளை வழங்குவதுடன் இந்த பிரச்சினை தொடர்பாக எதிர்வரும் தினங்களில் ஜனாதிபதியினை சந்தித்து பேசுவதாகவும் , இரண்டு சமூகங்களும் ஓருமித்து செயற்படக்கூடிய சந்தர்ப்பமாக இதனை பார்க்கின்றோம். எனவும் தெரிவித்தார்கள்.

Related posts

முஸ்லிம் சமூகத்திற்கான ஒரே ஒரு ஊடகமாக இருந்த UTV இற்கு நடந்தது என்ன? பசிலுக்கு விற்கப்பட்டதா ? UTV இழுத்து மூடப்பட்டதா?

wpengine

வவுனியாவில் புகைப்பரிசோதனை பத்திரம் காண்பிக்கத்தவறினால் தண்டனை

wpengine

சட்ட நடவடிக்கையிலிருந்து தப்பிக்கவே மக்கள் மத்தியில் மஹிந்த தோன்றுகிறார் : ராஜித

wpengine