பிரதான செய்திகள்பிராந்திய செய்தி

முசலி பிரதேச விவசாயிகளுக்கு உளுந்து,பயறு வழங்கி வைத்த காதர் மஸ்தான்

ஊடகப்பிரிவு

நிலையான வீட்டுத்தோட்ட அபிவிருத்தித் திட்டத்தின் மூலம் பின்தங்கிய கிராமிய பிரதேச அபிவிருத்தி வீட்டு விலங்கின வளர்ப்பு மற்றும் சிறு பொருளாதார பயிர்ச்செய்கை மேம்பாட்டு இராஜாங்க அமைச்சின் அனுசரனையில் மன்னார் மாவட்டத்தின் முசலி பிரதேசச் செயலகப் பிரிவிற்குட்பட்ட பி.பி பொற்கேணியில் அமைந்துள்ள கமநல அபிவிருத்தித் திணைக்களத்தில் வைத்து விவசாயிகளின் விவசாய ஊக்குவிப்பை மேம்படுத்தும் நோக்கில் 33 பயனாளிகளுக்கு 1 ஏக்கருக்கு தலா 12 கிலோகிராம் வீதம் 33 பயனாளிகளுக்கான உளுந்து மற்றும் பயறு செய்கைக்கான விதையினங்கள் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவருமான காதர் மஸ்தான் அவர்களினால் கடந்த 2ஆம் வழங்கி வைக்கப்பட்டது. 


குறித்த நிகழ்வில் முசலி பிரதேசச் செயலாளர் திரு. ரஜீவ், மன்னார் மாவட்ட விவசாய பணிப்பாளர் திருமதி. சகீலா பானு, உதவி கமநல சேவை ஆணையாளர் திரு. மெரீன் குமார் உள்ளிட்ட பயனாளிகள் பலரும் கலந்து கொண்டமைக் குறிப்பிடத்தக்கது.

Related posts

எமது சமூகத்தில் உள்ள சிறுவர்கள் அல்-குர்ஆனினை கற்று தேர்ச்சி பெற்றுள்ளமை பாராட்டத்தக்கது ஷிப்லி

wpengine

77 முஸ்லிம் குடும்பங்கள் காணி உரிமை கோரி முல்லைத்தீவில் போராட்டம்! அமைச்சர் றிஷாட் சந்திப்பு

wpengine

இளம் தமிழ் பெண் நண்பர்களின் சோக கதை

wpengine