பிரதான செய்திகள்பிராந்திய செய்தி

முசலி பிரதேச செயலக வாழ்வாதாரத்தில் நேரடியாக கணக்காளர்! பிரதேச மக்கள் விசனம்

மன்னார் முசலி பிரதேச செயலகத்தில் பல வருடகாலமாக கணக்காளராக கடமையாற்றும் அதிகாரியினால் வழங்கப்படும் வாழ்வாதாரத்தில் கணக்காளர் நேரடியாக தலையிட்டு பெறுமதியான பொருற்களை வழங்குவதில்லை என பிரதேச மக்கள் விசனம் தெரிவித்துள்ளார்கள்.

அத்துடன் வழங்கப்படும் வாழ்வாதாரத்தின் பெறுமதி ஒரு லச்சம் ரூபா இருந்தால் அதற்குரிய பொருற்கள் உரிய பயனாளிகளை சென்றடையவதில்லை எனவும் குற்றம் சுமத்திவுள்ளார்கள்.

அதிக இலாபங்களையும்,கொமிஸ்களையும் பெற்றுக்கொள்ளும் பொருற்கள் ஆன கதிரை,மேசை,வலை,குளிர்சான பெட்டி,தையல் இயந்திரம்,மோட்டார் சைக்கில் போன்ற போன்ற பொருற்களை வழங்கி வருகின்றார் எனவும் அறியமுடிகின்றன.

பொருற்களை கொள்வனவு செய்யும் மன்னார்,முருங்கன் கடை உரிமையாளர்களுடன் நேரடியாக தொடர்புகொண்டு சில கொமிஸ்களை பேசி பொற்களை கொள்வனவு செய்து மக்களுக்கு வழங்கி வருகின்றார் என தெரிவிக்கின்றனர்.

அத்துடன் இலாபங்களை பெற்றுக்கொள்ளும் நோக்குடன் கணக்காளர் பிரிவில் உள்ள சில உத்தியோகத்தர்களுக்கு உள்ளக இடமாற்றங்களை வழங்காமல் தொடராக அவர்களை வைத்துக்கொண்டு சில தில்லுமுல்லு வேளையிலும் ஈடுபட்டுவருகின்றார்.

முசலி பிரதேச செயலகத்தில் முன்னால் கணக்காளராக கடமையாற்றிய பலர் இவரை போன்று பல வருடம் தொடராக. முசலி செயலகத்தில் கடமையாற்றவில்லை எனவும் அறியமுடிகின்றன.

இவருக்கு கடந்த வருடம் மன்னார் மாவட்ட செயலகத்தின் ஊடாக இடமாற்றம் வழங்கப்பட்ட போதும் தன்னுடைய திறமையினை பயன்படுத்தி இடமாற்றத்தை ரத்துசெய்துவிட்டார்.எனவும் பிரதேச மக்கள் குற்றம் சுமத்திவுள்ளார்.

முசலி பிரதேச செயலகத்தில் முன்னால் செயலாளர் இருந்த போது வாழ்வாதாரத்தில் பல லச்சம் ரூபா நிதி மோசடி இடம்பெற்ற போது தற்போதைய கணக்காளரும் நேரடியாக தொடர்புபட்டு இலஞ்ச அணைக்குழுவுக்கு சென்று வருகின்றார். என்பது குறிப்பிடத்தக்கது.

இது தொடர்பில் வன்னி அமைச்சர்,பாராளுமன்ற உறுப்பினர்கள்,அரசாங்க அதிபர் கவனம் செலுத்த வேண்டும் என பிரதேச மக்கள் கோரிக்கை விடுத்துள்ளார்கள்.

Related posts

மொட்டுக்கட்சியில் முரண்பாடு! மைத்திரி,விமல் இரகசிய சந்திப்பு

wpengine

அரசாங்கத்துடன் இணைந்து தேசிய அரசாங்கத்தை அமைக்க போவதில்லை

wpengine

வாட்ஸ் ஆப், தரவுகளை பேஸ்புக்கிற்கு அளிப்பதால் வாட்ஸ் ஆப் பயன்படுத்தவேண்டாம்

wpengine