பிரதான செய்திகள்

முசலி பிரதேச செயலக வாழ்வாதாரம் உரிய பொருற்கள் மக்களுக்கு கிடைப்பதில்லை மக்கள் குற்றச்சாட்டு

மன்னார் முசலி பிரதேச செயலகத்தினால் வழங்கப்படும் ஒரு லச்சம் ரூபா பெறுமதியான வாழ்வாதாரத்தில் பல மோசடிகள் இடம்பெற்றுவதாக பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.

மேலும் தெரிவிக்கையில் ;

ஒரு லச்சம் ரூபாவுக்கான பொருற்கள் கிடைப்பதில்லை எனவும் தெரிவிக்கின்றனர்.

பொருற்களை கொள்வனவு செய்யும் கடைகள் குறிப்பாக மன்னாரில் உள்ள  அல்லது முருங்கனில் உள்ள ஒரே கடையில் மட்டும் பொருற்கள் கொள்வனவு செய்யப்படுவதாகவும் அறியமுடிகின்றன.

அத்துடன் வாழ்வாதாரம் என்ற போர்வையில் மோட்டர் பம்,தண்ணீர் இறைக்கும் இயந்திரம்,குளிர் சாதன பேட்டிகள்,கம்பிகள்,வலைகள் இன்னும் அதிக இலாபங்களை பெற்றுக்கொள்ளும் பொருற்களை கொள்வனவு செய்து மக்களுக்கு வழங்கப்படுவதாகவும் அறிய முடிகின்றன.

மேலும் கொடுக்கப்படும் பொருற்கள் உரிய நேரத்தில் வழங்கப்படுவதில்லை எனவும் அறிய முடிகின்றன.

இந்த பொருற்களை முசலி பிரதேச செயலகத்தில் உயர் அதிகாரி ஒருவர் நேரடியாக கொள்வனவு செய்து வினியோகித்து வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு முசலி பிரதேச செயலகத்தினால் வழங்கப்பட்ட வாழ்வாதாரத்தில் பல லச்சம் ரூபா நிதி மோசடி இடம்பெற்றன.சம்பந்தப்பட்ட உயர் அதிகாரி மற்றும் உத்தியோகத்தர்கள் இடமாற்றம் செய்யப்பட்டார்கள்.அது தொடர்பான கணக்காய்வு இன்னும் இடம்பெற்று வருகின்றன.

இது தொடர்பில் அரசாங்க அதிபர்,பிரதேச செயலாளர் மாவட்ட அபிவிருத்தி குழு தலைவர்கள்,முசலி பிரதேச சமூக சிந்தனையாளர்கள் கவனம் செலுத்த வேண்டும் என பிரதேச மக்கள் கோரிக்கையினை விடுத்துள்ளார்கள்.

குறிப்பு
இது தொடர்பான வீடியோக்கள்,மக்கள் குரல் பதிவுகள்,போட்டோக்கள் விரைவில் வெளிவரும்

Related posts

அனைத்து அரச பாடசாலைகளம் 5 நாட்கள் விடுமுறை

wpengine

மன்னார்-முன்தங்பிடிய பகுதியில் கேரள கஞ்சா

wpengine

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ கொவிட் ஒழிப்புச் செயலணிக் கூட்டத்தின் புதிய தீர்மானம்

wpengine