Breaking
Sun. Nov 24th, 2024

சர்வதேச புகைத்தல்-மது எதிர்ப்பு தின நிகழ்வுகள் நேற்று நாடு முழுவதும் இடம்பெற்றது.

புகைத்தலுக்கு முற்றுபுள்ளி வைக்கும் நோக்குடன் சமூக வலுவூட்டல் மற்றும் நலனோம்புகை அமைச்சு மே 31 தொடக்கம் – ஜுன் 12 வரை நாடு முழுவதும் எதிர்ப்பு தினமாக பல்வேறுபட்ட நிகழ்வுகள் நடாத்தி வருகின்றனர்.

அதன் நிகழ்வாக முசலி பிரதேச வாழ்வின் எழுச்சி அபிவிருத்தி கிளையின் ஏற்பாட்டில் இன்று காலை முசலி பிரதேச செயலாளர் செல்லத்துறை கேதீஸ்வரன் தலைமையில் முசலி பிரதேசத்திற்கான புகைத்தல் -மது எதிர்ப்பு தின நிகழ்வுகள்  ஆரம்பித்து வைக்கபட்டது.0635860b-5a08-4bf9-bf14-3fb73d8bc99f

இன் நிகழ்வில் பிரதேச செயலாளர் தெரிவிக்கையில் இந்த பிரதேசத்தில் உள்ள இளைளுர்களை கல்வியில் உயர்த்த வேண்டும் என்பது தான் என்னுடைய நோக்கக இருக்கின்றது என்றும் எனது பிரதேசத்தில் வசிக்கின்ற குடும்பங்களின் இரண்டு விடயங்களை பற்றி மிகவும் முக்கியமாக எந்த நாளும் யோசிக்கின்றேன் குறிப்பாக நாளாந்தம் ஒவ்வெரு குடும்பங்களும் பனி,பட்டினி இல்லாமலும்,பாடசாலை செல்ல கூடிய வயதுடைய இளையவர்கள் யாரும் இருந்தால் அவர்களை கல்வி கூடங்களுக்கு அனுப்பி கல்வி மட்டத்தை உயர்த்த வேண்டும் என்று நான் நாளாந்தம் யோசிக்கின்றேன் என்றும் தெரிவித்தார்.311f9e99-fb97-48ef-9d45-7375f6846b1c

அத்துடன் கடந்த வருடம் புகைத்தல்-மது எதிர்ப்பு தினத்தில்  சேமித்த பணத்தில் முசலி பிரதேசத்தில் வறுமைக்கோட்டில் வாழும் பாடசாலை செல்லும் மாணவர்களின் கல்வி நிலையினை உயர்த்தும் நோக்குடன் 95 மாணவர்களுக்கு புலமைபரிசில் வழங்கி வைக்கபட்டது  அத்துடன் கடந்த வருடம் கிராம மட்டங்களில் புகைத்தல்-மது சேமிப்பு பணங்களை அதிகமாக சேமித்த பத்து (10) வாழ்வின் எழுர்ச்சி அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கு சான்றிதழ்களும் வழங்கி கௌரவிக்கபட்டது.6caaf2f6-f812-413e-81ca-0e825ef5811a

இன் நிகழ்வில் முசலி திவிநெகும திணைக்கள தலைமை முகாமையாளர் பிர்தொஸ்,வங்கி முகாமையாளர் பீரீஸ்,வாழ்வின் எழுர்ச்சி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மற்றும் பெற்றோர்கள் கலந்து சிறப்பித்தனர்.8d4148e9-67d1-42f4-838b-f0b8ac38ff956ce4a527-0473-44a4-83d3-aaa478af153198e916b0-8f5b-493f-ab91-e5cd2f8a4a20942b7a02-a5ac-44c6-84df-4ed1db61edcf

vanni

By vanni

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *