Breaking
Wed. Apr 24th, 2024
அப்துல்லாஹ் இர்சான்

மன்னார் மாவட்டத்தில் முசலி பிரதேச செயலகத்தில் கிராம அபிவிருத்தி உத்தியோகத்தராக (RDO) கடமையாற்றும் உத்தியோகத்தர் சிறந்த முறையில் சங்கங்களை வழிநடாத்துவதில்லை என பிரதேச மக்கள் விசனம் தெரிவித்துள்ளார்கள்.

மேலும் தெரிவிக்கையில் இந்த உத்தியோகத்தர் கிராம அபிவிருத்தி சங்களுக்கு தேவையான ஆலோசனைகள்,வழிகாட்டல்களை உரிய முறையில் வழங்குவதில்லை எனவும் தெரிவிக்கின்றனர்.

ஒப்பந்த வேலைகளில் ஈடுபடுத்தபட்ட கிராம அபிவிருத்தி சங்கத்தின் உறுப்பினர்கள் பணங்களை மீளப்பெற வருகின்ற போது அவர்களை கேவலமான முறையிலும்,அசிங்கமான முறையிலும் நடந்துகொள்ளுகின்றார் எனவும் கவலை தெரிவித்துள்ளார்கள்.

அத்துடன் பணங்களை பெற வருகின்ற சங்க உறுப்பினர்களை பல மணி நேரங்களை காத்திருக்க வைக்கின்றார் எனவும் உரிய நேரத்திற்கு அலுவலகத்திற்கு கடமைக்கு வருவதில்லை எனவும் தெரிக்கின்றனர்.

மேலும் சில குறிப்பிடப்பட்ட  அமைப்புக்களுடன் நேரடியான தொடர்புகளை ஏற்படுத்தி சில பெறுமதிகளை பெற்றுக்கொண்டு ஒப்பந்த வேளைகளை மேற்கொள்ளுமாறு வேண்டிக்கொள்ளுகின்றார் எனவும் கூறுகின்றனர்.

இது போன்று அலுவலக நேரத்தில் அல்லது அலுவலக விஷேட நிகழ்வுகளில் மது பாவிப்பதாகவும் தெரிவிக்கின்றனர்.

எனவே இது போன்ற உத்தியோகத்தர்களின் நடவடிக்கை காரணமாக பொது மக்கள் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்து வருகின்றார்கள்.

இது தொடர்பில் மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர்,மக்கள் பிரதிநிதிகள்,பிரதேச செயலாளர் கவனம் செலுத்துமாறு பிரதேச மக்கள்  வேண்டுகோள் விடுத்துள்ளார்கள்.
vanni

By vanni

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *