பிரதான செய்திகள்

முசலி பிரதேச செயலகத்தில் தஞ்சமடைந்த சமுர்த்தி பயனாளிகள்! பலர் கவலை

(அபு இல்யாஸ்)

சமூக வலுவூட்டல் மற்றும் நலனோம்புகை அமைச்சின் வாழ்வின் எழுச்சி அபிவிருத்தி திணைக்களத்தின் ஊடாக குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களை இனம்காணும் 2015ஆம் ஆண்டு படிவத்தின் படி புதிய சமுர்த்தி பெயர் பட்டியல் மன்னார் மாவட்டத்தில் முசலி பிரதேச செயலத்தினால் இந்த வாரம் வெளியிட்டுள்ளதாக அறியமுடிகின்றது. 

இதன் காரணமாக முசலி பிரதேசத்தில் உள்ள பழைய பயனாளிகளின் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளதை அறிந்து கொண்ட பயனாளிகள் இன்று காலை பிரதேச செயலக வளாகத்தை சுற்றி நடமாடியதாகவும்,பலர் மிகவும் கவலையுடன் பிரதேச செயலாளர் சந்தித்து மனுவினை வழங்கியதாகவும் அறியமுடிகின்றது.

இது தொடர்பில் பிரதேச செயலாளர் கருத்து தெரிவிக்கையில்;

 இதுவரைக்கும் எந்த பயனாளியின் பெயரும் நீக்கப்படவில்லை,உங்களுடைய முறைப்பாட்டு மனுவினை கிராம சேவையாளர் பிரிவில் உள்ள சமுர்த்தி உத்தியோகத்தர்களிடம் மனுவினை வழங்குமாறு ஆலோசனை வழங்கி உள்ளார். என அறியமுடிகின்றது.

புதிய பெயர் பட்டியலினால் பலர் குழப்பத்தில் உள்ளார்கள் என பிரதேச செய்திகள் வெளியாகி உள்ளது.

Related posts

இன்றைய வானிலை முன்னறிவிப்பு!

Editor

சமுகவலைத்தளத்தில் பிரதமர் உடன் சண்டை போடும் நாமல் ராஜபக்ச

wpengine

மக்கள் பணத்தில் சினாவுக்கு நஷ்ட ஈடு கொடுக்ககூடாது. ஜே.வி.பி

wpengine