மீள்குடியேற்ற அமைச்சின் நிதி ஒதுக்கிட்டின் ஊடாக கடந்த வருட இறுதியில் மன்னார் மாவட்டத்தில் முசலி பிரதேச செயலகத்தின் ஊடாக வழங்கப்பட்ட வாழ்வாதாரத்தில் பல மோசடிகள் இடம்பெற்றுள்ளது.என தெரிவித்து சிலாவத்துறை கிராம அபிவிருத்தி சங்க செயலாளர் உடனான குழுவினர் ஊழல் மோசடிகள் ஆணைக்குழு, கணக்காய்வு திணைக்களம் மற்றும் பொது நிர்வாக அமைச்சின் முறைப்பாடு செய்துள்ளார்கள்.
இதனை விசாரிக்க கொழும்பு பொது கணக்காய்வு திணைக்களத்தில் இருந்து இன்று காலை முசலி பிரதேச செயலாளர் பிரிவுக்கு கணக்காய்வு குழுவினர் வருகை தந்துள்ளதாக பிரதேச தகவல் வெளியாக உள்ளது.
மேலும் அறிந்துகொள்கையில்
இந்த கணக்காய்வு குழுவினர் சுமார் 7க்கும் மேற்பட்ட நாட்கள் பிரதேசத்தில் தங்கி இருந்து இடம்பெற்ற ஊழல்கள் தொடர்பாக சல்லடை போட உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
தற்போது முசலி பிரதேச செயலகத்திற்கு புதிய செயலாளர் வருகை தந்துள்ள போது இப்படியான விசாரணைகள் இடம்பெறுவது வரவேற்கதக்கது எனவும் பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.