Breaking
Mon. Nov 25th, 2024

(முசலியூர் கே.சி.எம்.அஸ்ஹர்)

மன்னார் மாவட்டத்தில்  முசலி பிரதேசத்தில் உள்ள பிரதேச சபை 1990 ஆம் ஆண்டு ஏற்பட்ட யுத்ததினால் முற்றாக அழிக்கப்பட்டது.

பின்னர் பல வருடகாலமாக அரிப்பு என்னும் தமிழ் கிராமத்தில்  இயங்கியது என்பது குறிப்பிடக்கது.

சிலாவத்துறை நகரில் கட்டப்பட்ட  புதிய பிரதேச சபை கட்டிட  தேவை குறித்து அமைச்சர் றிசாத் பதியுதீன்  முன்னால்  மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி அமைச்சருடன் தொடர்பு கொண்டு அழகிய கட்டிடத்தையும் தேவையான அனைத்து வாகனங்களையும் பெற்றுக்கொடுத்துள்ளார்.

முசலிப்பிரதேசக் கிராமங்களினது வீதிகள்  குடிநீர் விநியோகம்,திண்மக்கழிவகற்றல்,பஸ்தரிப்பிடம் அமைத்தல் போன்ற பணிகள் குவிந்து கிடக்கின்றன.இதற்கு நிதியீட்டம் அரசின் மூலமும் .மக்களுக்குப் பணிசெய்ய வேண்டியது அரச பணியாளர் கடமை ஆகும் இருந்தும் பிரதேச சபைகள் கலைக்கப்பட்டுள்ளதால் சபை செயலாளரின் கீழ்க் கொண்டுவரப்பட்டுள்ளது.

அவர் ஒரு சுப்ரா தர அதிகாரி ஆவார். அலுவலக ஊழியர்களின் வருகை,செல்கை நேரங்களை ஒரு ஒழுங்கமைப்புக்குள் கொண்டு வந்து மனிதவள வீண் வீரயத்தைத் தடுக்கும் நல்நோக்கில் பிங்கர் பிரின்ட் மெசினைக்  காலை நேரம் கடந்த (புதன் 8.06.2016) பொருத்தியுள்ளார்.

அதே தினம் மத்தியானம் மெசின் காணாமல் போயுள்ளது.இதனை வெளிநபர்கள் எடுத்துச்சென்றிருக்க முடியாது.இதனுடன் தொடர்புடையோர் கண்டுபிடிக்கப்பட வேண்டும்.சட்ட நடவடிக்கையும் எடுக்கப்பட வேண்டும்.உள்ளுராட்சி மாகாண சபை அமைச்சரின் கவனத்திற்கும் கொண்டு செல்ல வேண்டும்.இச்செயல் எமது மக்கள் பிரதிநிதிகளின் நற்பெயரைக் கெடுக்கும் ஒரு நடவடிக்கையாகும்.

எதிர்காலத்தில் மெசினைக் கண்காணிக்கும் கமராக்கள் பூட்டப்பட வேண்டும்.இந்த பிரதேச மக்கள் சார்பாக இந்த வேண்டுகோளை விடுக்கின்றேன்.

vanni

By vanni

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *