ஆயுர்வேத வைத்தியசாலையை சிலாபத்துறையில் திறப்பதற்கு முசலி பிரதேச சபை பூரண ஒத்துழைப்பை வழங்க வேண்டும் என எனது முதலாவது கூட்டத்தின் கன்னி உரையின்போது எனது முதலாவது பிரேரணையாக முன்வைத்தேன்.
முதல் கூட்டத்தில் முன்வைத்த பிரேரணையை ஏற்றுக்கொண்ட தவிசாளர் மற்றும் பிரதி தவிசாளர் அதற்கு பூரண ஒத்துழைப்பை வழங்கினார்கள், மற்றும் சபை உறுப்பினர்கள் அனைவரும் அதனை ஏற்றுக் கொண்டு தங்களது சம்மதத்தையும் தெரிவித்தனர். அனைவருக்கும் எனது நன்றிகள்.
ஆயுர்வேத வைத்தியசாலையை முசலியின் மையத்தில் அமைந்துள்ளது அனைவருக்கும் போக்குவரத்து வசதிகள் கொண்ட சிலாபத்துறையில் உடனடியாக திறப்பதற்கு முசலி பிரதேச சபை ஒத்துழைப்பு வழங்குவதோடு அதற்கான கட்டிடம், தளபாடம், ஆள் வழத்தை வழங்குவதாகவும் முடிவெடுக்கப்பட்டது.
அதனை இயக்குவதற்கான கடிதங்களும் உரிய திணைக்களங்களுக்கு அன்றே அனுப்பிவைக்கப்பட்டன.
மேலும் 15.07.2021 அன்றைய கூட்டத்தில் நான் தெரிவித்த கருத்துக்கள்.
- நிருவாக ரீதியாக முசலிப் பிரதேசம் எதிர்நோக்கும் சவால்கள்.
- கடல் தொழிலாளர்கள் பாரிய பிரச்சினைகளை சந்திக்கிறார்கள். அவர்களது பாடு பிரச்சினை, இந்திய மீனவர்களது பிரச்சினை என்பவை…
- விவசாயிகள் எதிர்நோக்கும் சவால்களும் இங்குள்ள நீர்ப்பாசன ஒழுங்கும்.
- சுகாதார துறையும் அதன் நிலமையும். எமது பிரதேச வைத்திய துறை எதிர்நோக்குகின்ற சிக்கல்கள்.
- கல்வி மிகவும் பின்தங்கிய நிலையில் உள்ள காரணமும் மீள்குடியேற்றத்தில் அதன் வகிபாகமும்.
- மீள்குடியேற்றத்திட்டமும் அரசின் நிலைப்பாடும்.
- தற்பெதைய அரசியல் போக்கில் எமது பிரதேசத்தின் முக்கியத்துவமும் பின்னடைவும்.
இவைகளில் முசலி பிரதேச சபையின் பங்களிப்பு எவ்வாறு அமைய வேண்டும் என எடுத்துக் கூறினேன்.
அத்துடன் அங்கு எடுக்கப்பட்ட தீர்மானங்கள்.
- முசலிப் பிரதேசத்திற்கு அணர்த்த முகாமைத்துவ திணைக்களத்தினால் வழங்கப்பட்டுள்ள “கல்வெட்டுகள், போ(Bo)க்குகள்” என்பவற்றை உடணடியாக பெற்று அமைத்தல்.
- கொண்டச்சி மற்றும் சிலாபத்துறை குடிநீர் திட்டத்தை சிறந்த முறையில் இயக்குதல்.
- ஆயுர்வேத ஆஸ்பத்திரியை திறத்தல்.
- சபைக்குரிய கடைகளை இயக்குதல்.
- இயங்கு நிலையிலில்லாத இயந்திரங்களுக்கு உடணடியாக தீர்வொன்றை எடுத்தல்.
- மேலும் சில உள்ளக மற்றும் நிருவாக விடாயங்கள் குறித்து கலந்துரையாடப்பட்டன,
கூட்டறிக்கை தொடரும்…