பிரதான செய்திகள்

முசலி பிரதேச சபையினால் தெருவிளக்குகள் பொறுத்தப்படுமா? முகநூல் பாவனையாளர்கள் விசனம்

மன்னார் மாவட்டத்தில் முசலி பிரதேசத்தில் முஸ்லிம் மக்கள் பெரும்பான்மையாக வாழும் மீள்குடியேற்ற கிராமங்களில் அதிகமான தெருவிளக்குகள் பழுதடைந்த நிலையிலும்,இன்னும் பெருத்தப்படாமல்  காணப்படுவதாகவும் தெரிவிக்கின்றனர்.

முஸ்லிம் மக்கள் பெரும்பான்மையாக வாழும் பிரதேசம் என்ற காரணத்தினால் எதிர்வரும் தினங்களில் நோன்பு காலம் என்பதனால் இரவு நேரத்தில் பெண்கள்,ஆண்கள்,சிறுவர்கள்,வயோதிபர்கள் தொழுகைக்காக சென்றுவர வேண்டியிருக்கின்றன இது தொடர்பில் பல முகநூல் பாவனையாளர் கேள்விகளையும்,முகநூல் பதிவுகளையும் சமுகவலைத்தளத்தில் பதிவு செய்துள்ளார்கள்.

வாக்களித்த மக்கள் மத கடமைகளை சிரான முறையில் மேற்கொள்ள முசலி பிரதேசத்தில் உள்ள இரண்டு மாகாண சபை உறுப்பினர்கள் மற்றும் பிரதேச சபை நடவடிக்கை எடுக்குமா?

மக்கள் நலன் கருதி அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தலைவரும்,அமைச்சருமான றிஷாட் பதியுதீனால் கடந்த காலத்தில் கிராமங்களுக்கு வழங்கப்பட்ட பல தெருவிளக்குகள் இன்னும் பொருத்தப்படாமல் இருப்பதாகவும் கிராம மக்கள் விசனம் தெரிவித்துள்ளார்கள்.

இது தொடர்பில் உரிய அதிகாரிகள்,அரசியல்வாதிகள் கரிசனை எடுத்து தெரு விளக்குகளை பொருத்த நடவடிக்கை எடுக்குமாறு முகநூல் பாவனையாளர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளார்கள்.

Related posts

அனர்த்தங்கள் தொடர்பில் அறிவிக்க தொலைபேசி இலக்கங்கள் அறிமுகம்

wpengine

ஊடகவியலாளர்களுக்கான முதலாவது இப்தார் நிகழ்வு

wpengine

முல்லைத்தீவு முஸ்லிம்களை நிம்மதியாக வாழவிடுங்கள் றிஷாட் கோரிக்கை

wpengine