பிரதான செய்திகள்

முசலி பிரதேச அபிவிருத்தி குழு கூட்டத்தில் சூடு பிடித்த மன்னார்-புதுவெளி கிராமத்தின் வீட்டு திட்ட பிரச்சினை

மன்னார் மாவட்டத்தில் முசலி பிரதேசத்திற்கான பிரதேச அபிவிருத்தி குழு கூட்டம் நேற்று மாலை 2மணிக்கு  பிரதேச செயலாளரின் நெறிப்படுத்தலில் இடம்பெற்றது, இதில் பிரதேச அபிவிருத்தி குழுவின் இணைத் தலைவர்களான றிஷாட் பதியுதின்,சார்ள்ஸ் நிர்மலநாதன்,காதர் மஸ்தான் மற்றும் வடமாகாண அமைச்சர் டெனிஸ்வன் ஆகியோர்கள் தலைமையில் இடம்பெற்றது.

இதன் போது பிரதேச செயலகத்தின் ஊடாக கிராம உத்தியோகத்தர்களினால் தெரிவு செய்யப்பட்ட புதுவெளி கிராமத்திற்கான வீட்டு திட்ட பெயர் பட்டியலில் பாரிய குறைப்பாடுகளும்,பக்கசார்பான தெரிவுகளும் இடம்பெற்று விட்டதாகவும்,கிராம உத்தியோகத்தர்,பிரதேச செயலகத்தில் கடமையாற்றும் ஓருவர் தனது அப்பாவுக்கு வீட்டு திட்டத்தை கொடுத்துள்ளார், என்றும் புதுவெளி கிராமத்தில் உள்ள ஒரு சில இளைஞர்கள்,வயோதிபர்கள் குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்கள்.

இதனால் பிரதேச செயலகத்தில் கடமையாற்றும் கிராம உத்தியோகத்தரும்,அபிவிருத்தி உத்தியோகத்தருக்கும் ஓன்றாக சேர்ந்து நியாயம் கேட்டவந்த புதுவெளி இளைஞர்களுடன் அனாகரிகமாகவும் வாய்தர்கத்திலும் ஈடுபட்டுள்ளதாகவும் அறியமுடிகின்றது.

இது தொடர்பில் உரிய குழுவினை நியமித்து யாருக்கும் பிரச்சினை இல்லாமல் உரிய தீர்வினை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்குமாறு இணைக்குழுவின் தலைவர்கள் பிரதேச செயலாளரை பணித்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Related posts

தாஜூதீன் கொலையின் காவல்துறையினை குற்றாளியாக்க கூடாது (விடியோ)

wpengine

அரசாங்கத்துடன் இணைந்து தேசிய அரசாங்கத்தை அமைக்க போவதில்லை

wpengine

ஊடகவியலாளர்களுக்கான இரண்டு நாள் செயலமர்வு

wpengine