பிரதான செய்திகள்

முசலி பிரதேசத்தின் பழமையான “மஞ்சக்குளத்து” பள்ளிவாசல் பகுதி புணர்நிர்மானம் செய்யப்படுமா?

(சிபான்)

வெள்ளிமலை முஸ்லிம் கிராமத்தின் காணியினை அரிப்பு கிராமத்தில் உள்ள சிலர் அடாத்தாக பிடித்து சுற்றுமதில் அமைக்க முற்பட்ட வேளை சட்ட ரீதியாக இடைநிறுத்தப்பட்டுள்ள நிலையில் வெள்ளிமலை கிராமத்திற்கு அருகாமையில் உள்ள முசலி பிரதேசத்தின் பழமையான “மஞ்சக்குளத்து பள்ளிவாசல் பகுதி புணர்நிர்மானம் செய்யப்படுமா? என பிரதேச சமூக ஆர்வளர்கள் கேள்வி எழுப்பி உள்ளார்கள்.

பண்டாரவெளி,இலந்தைக்குளம்,மணற்குளம் மக்கள் 1957ஆம் ஆண்டுகாலப்பகுதியில்  அரிப்பு கிராமத்திற்கு அருகாமையில் உள்ள மஞ்சக்குளத்து பள்ளிவாசல்,மஞ்சக்குளத்து கிணறு மற்றும் மஞ்சக்குளத்து கழிவு நீரோடை பகுதியில் வாழ்ந்து வந்த வேலையில் இன்று மஞ்சக்குளத்து பள்ளிவாசல் பகுதி பராமரிப்பு அற்ற நிலையில் இருந்து வருவதாக தெரிவிக்கின்றனர்.

இது போன்று 1957ஆம் ஆண்டு முசலி பிரதேசத்தில் ஏற்பட்ட பாரிய வெள்ளத்தின் காரணமாக முசலி பிரதேசத்தில் உள்ள அதிகமான மக்கள் வெள்ளிமலை பகுதியில் அமைந்துள்ள மஞ்சக்குளத்து பள்ளிவாசலில் குறிப்பிட்ட காலம் வசித்து வந்ததாகவும் அறியமுடிகின்றது.

அதே வேளை மஞ்சக்குளத்து பள்ளிவாசலுக்கு சொந்தமான காணியில் இருந்த பனை மரத்தினை அரிப்பு கிராமத்தில் உள்ள ஒருவர் வெட்டினார் என்ற குற்றச்சாட்டின் பேரில் அரிப்பு நிர்வாகம் அவருக்கான தண்டப்பணத்தை 1995ஆம் ஆண்டு காலப்பகுதியில் புத்தளத்தில் வாழ்ந்த பண்டாரவெளி பள்ளிவாசல் நிர்வாகத்திற்கு அனுப்பி வைத்ததாகவும் வரலாற்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

எனவே முஸ்லிம்களின் பழமையான பள்ளிவாசல் பகுதியினை மீள் நிர்மாணம் செய்ய முசலி பிரதேச மக்கள்,வெள்ளிமலை,பண்டாரவெளி,இலந்தைக்குளம்,மணற்குளம் கிராம மக்கள் ஒன்றினைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என வேண்டுகோள் விடுக்கின்றனர்.

Related posts

லெப்டினன் யோஷித இடைநிறுத்தம்; சம்பளமும் படிகளும் நிறுத்தம்.

wpengine

மக்களின் பிரச்சினைகளை தீர்க்க வேண்டுமானால் அவர்களின் வருமானத்தை அதிகரிக்கும் வேலைத்திட்டம் அவசியம்!
-நளின் பெர்னாண்டோ-

Editor

வவுனியாவில் மஹிந்தவின் வேட்பாளர் மீது தாக்குதல்

wpengine