Breaking
Mon. Nov 25th, 2024

(முசலியூர்.கே.சி.எம்.அஸ்ஹர்)

முசலி தேசிய பாடசாலையின் புதிய அதிபராக, ஜனாப் ஹபீபு மஹ்பூபு உவைஸ்  கல்வியமைச்சால்(நிரல் அமைச்சால்) நியமிக்கப்பட்டுள்ளார். அதிபர் சேவை தரம்02 ஐச் சேர்ந்த இவர் அல்மினா மு.ம.வி தாராபுரம் ,உமர் பாருக் .மு.ம.வி.புளிச்சாக்குளம் ,ஹிதாயத் நகர் .ம.வி.மன்/ பண்டாரவெளி மு.ம.வி,மன்/ அகத்தி முறிப்பு அ.மு.க.பா போன்ற பாடசாலைகளில் அதிபராகப் கடமை புரிந்துள்ளார் .


மன்/பண்டாரவெளி.மு.ம.வி.கொழும்பு சாஹிறா கல்லூரி,மன்/ முசலி.ம.வி. போன்றவற்றின் பழைய மாணவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.இவரின் ஆசிரியர் சேவைப்பயணம் கொழும்பு சாஹிறா கல்லூரியிலிருந்து ஆரம்பமானது.

இவர் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வணிகத்துறைப் பட்டதாரி,கொழும்புப் பல்கலைக்கழக பட்டப்பின்படிப்பு கல்வி டிப்ளோமாதாரி, சாமசிறி தேசகீர்த்தி,அகில இலங்கை சமாதான நீதிவான்,சிறந்த மேடைப்பேச்சாளர்,மிகுந்த ஆன்மீக ஈடுபாடுடையவர்,சமூக சேவையில் அதிக ஈடுபாடு கொண்டவர் என்பது குறிப்பிடதக்கது.

பொற்காலத்தில் முசலி ம.வி இல் கல்வி கற்று பல்கலைக்கழகம் சென்ற புத்திஜீவிகளில் இவரும் ஒருவர் .அக்காலத்தில் பல்கலைக்கழகம் செல்வது என்பது மிகக்கடினமாக இருந்தது.ஒருவருக்கு பல்கலைக்கழகம் கிடைத்துவிட்டது என்றால் அவரின் புகழ் ஊரெல்லாம் மணக்கும் காலப்பகுதி அது.முசலித்தேசிய பாடசாலையின் பழைய மாணவராகிய இவரை பட்டை தீட்டப்பட்ட மாணிக்கமாக இதே பாடசாலை பெற்றிருப்பது ஒரு வரப்பிரசாதமாகும்.ஆசிரியர்களோடு மிகக்கௌரவமாக நடந்து கொள்ளும் இவர். ஆசிரியர்களைக் கொண்டு உயர் கல்வி அடைவுகளைப் பெற்று பாடசாலையின் புகழை ஓங்கச்செய்வதில் வல்லவர்.ஆசிரியர்களை சரியாக இனம்கண்டு உரிய பொறுப்புக்களை உரியவர்களிடம் வழங்கி சிறந்த அறுவடைகளைப் பெறுபவர்.சில பாடசாலைகளிலிருந்து மனமுடைந்து இடமாற்றம் பெற்றுவந்த ஆசிரியர்களை இவர் சரியாகக் கையாண்டு உயர்தரத்தில் குறித்த பாடத்தில பல எ(உயர்தரச்சித்திகளை) பெற்றுச்சாதனை படைத்துள்ளார்.சுருக்கமாக ஆசிரியர்களை சரியாக இனங்கண்டு இயக்கும் சாணக்கியம் இவரிடம் நிறையவே உண்டு.

முசலி பிரதேச மாணவர்கள், காலடியில் முசலி  தேசிய பாடசாலையை வைத்துக்கொண்டு உயர்தரத்தில் கணித விஞ்ஞான,தொழினுட்ப பிரிவுகளில் கல்வி கற்பதற்காக மன்னார்த்தீவு,யாழ்ப்பாணம்,கெகுனுகொல்ல,சியம்பலாகஸ்கடுவ போன்ற பகுதிகளைத் தேடிச்செல்லும் யுகம் மாற்றப்பட வேண்டும்.

மாணவர் குழாம் நாட்டின் நாலா பக்கத்திலும் இருந்து முசலியைத்தேடி ஓடி வரும் காலம் இனி உருவாகும் என்ற நம்பிக்கை எமக்குண்டு.உயர்தர கணித விஞ்ஞான பிரிவுகளுள்ள 1 ஏ.பி. பாடசாலையின் அதிபராக நியமிக்கப்படுபவர் ஒரு பட்டதாரியாகவும் இருக்கவேண்டும்.என்ற நியதியும் உண்டு.இது பலமாகாணங்களில் அமுலில் உள்ளது.தரம் 2 ல் உள்ள அதிபர்கள் விரைவில் தரம் 1 இற்கு பதவி உயர்த்தப்பட உள்ளனர்.என்பதும் குறிப்பிடத்தக்கது.

vanni

By vanni

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *