பிரதான செய்திகள்பிராந்திய செய்தி

முசலி கல்வி கோட்ட முஸ்லிம் பாடசாலை அதிபர்களின் கோரிக்கையினை நிறைவேற்றுமா? வடமாகாண சபை

மன்னார் மாவட்டத்தில் முசலி கல்வி கோட்டத்திற்குட்பட்ட முஸ்லிம் பாடசாலை அதிபர்கள் எதிர்வரும் (02/09) ஹஜ் பெருநாளை சிறப்பாக கொண்டாட அனைவரும் கையொப்பம் வைத்து வடமாகாண சபையின் கல்வி அமைச்சருக்கும்,அதன் செயலாளருக்கும் கோரிக்கையினை விடுத்துள்ளார்கள் என அறியமுடிகின்றது.

முஸ்லிம் பாடசாலைக்கான இரண்டாம் தவனைக்கான விடுமுறை எதிர்வரும் 18ஆம் திகதி ஆரம்பித்து 31ஆம் திகதிகளில் முடிவடையும் வேலையில் இதனை நிறுத்தி விட்டு அதிபர்கள் கோரிக்கை விடுக்கும் தினங்களில் தினத்தில் விடுமுறை வழங்கி அதனை மீண்டும் திறப்பதற்குரிய வசதிகளை செய்து தருமாறு கோரிக்கையினை முன் வைத்துள்ளார்கள்.

வட மாகாணத்தில் முஸ்லிம் பாடசாலைகள் பெரும்பான்மையாக உள்ள கல்வி கோட்டம் என்பது குறிப்பிடதக்கது.

இது தொடர்பில் எமது வன்னி நியூஸ் செய்தி பிரிவு முசலி கோட்ட கல்வி பணிப்பாளரை தொடர்பு கொண்ட வேலை தொடர்பு கொள்ள முடியவில்லை.

Related posts

விவசாய நிலங்களை பார்வையீட்ட அமீர் அலி

wpengine

மன்னார் நகர பிரதேச மட்ட விளையாட்டு போட்டி (படம்)

wpengine

வவுனியாவில் புகையிரத கடவை அமைக்க கோரி மகஜர்

wpengine