பிரதான செய்திகள்

முசலி இப்தார் இனநல்லுறவு,சமூகங்களுக்கிடையிலான ஒற்றுமைக்கு காரணமாக உள்ளது பிரதேச செயலாளர்

(எஸ்.எச்.எம்.வாஜித்)

மன்னார் மாவட்டத்தில் உள்ள  முசலி பிரதேச செயலகத்தின் முஸ்லிம் மஜ்லிஸ்சின் ஏற்பாட்டில் பிரதேச செயலாளர் கே.எஸ்.வசந்த குமார் தலைமையில் நோன்பு திறக்கும் இப்தார் நிகழ்வு இன்று மாலை பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.

இன் நிகழ்வில் பிரதேச செயலாளர் தெரிவிக்கையில்

நான் இந்த பிரதேசத்திற்கு சேவையாற்ற வந்தன் பின்பு முதன் முதலாவதாக இடம்பெறும் இப்தார் நிகழ்வு அதற்காக நான் பெறுமை அடைகின்றேன். இப்படியான நிகழ்வுகளின் ஊடாக இன நல்லுறவு,சமூகங்களுக்கிடையிலான ஒற்றுமை ஏற்படுவதை பார்க்கின்ற போது மிகவும் சந்தோஷமாக இருக்கின்றது.

எனக்கு பல முஸ்லிம் நண்பர்கள் கூட இருக்கின்றார்கள் அவர்கள் நோன்பின் நன்மைகள் பற்றி எனக்கு தெரிவித்துள்ளார்கள் நோன்பை பற்றி நான் இன்னும் படிக்கின்றேன் எனவும்,நோன்பு நோற்பதன் காரணமாக மனதை ஒருமுகப்படுத்தி எங்களுடைய ஆசைகளை கட்டுபடுத்தி படைத்த இறைவனை பயந்தவர்களாக நாங்கள் இருக்கின்றோம்.

ஒரு நோன்பாளி பிழைகள் செய்யமுட்பட்டால் அதனை தடுக்கும் ஒரு கேடயமாக இந்த முஸ்லிம் சமூகத்தின் நோன்பு இருக்கின்றது எனவும் தெரிவித்தார்.
இன் நிகழ்வில் சிலாவத்துறை நிலைய பொலிஸ் அதிகாரிகள்,முசலி நீர்பாசன திணைக்கள அதிகாரிகள்,வனவள திணைக்கள அதிகாரிகள் மற்றும் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் என சுமார் 200மேற்பட்ட முஸ்லிம்,தமிழ்,சிங்கள என பலர் கலந்துகொண்டனர்கள் என்பது குறிப்பிடதக்கது.

Related posts

புத்தளம் பகுதியில் மீட்கப்பட்ட அரிய வகை ஆந்தை!

Editor

இளம் மனைவிக்கு கணவன் செய்த கேவலம்! 23ஆம் திகதி விளக்கறியல்

wpengine

பலஸ்தீன முஸ்லிம்கள் விடயத்தில் ஏன் மௌனம்? குஜராத்தை சுடுகாடாக்கிய மோடிக்கு நல்லாட்சிக்கு ஆதரவு

wpengine