Breaking
Mon. Nov 25th, 2024

(ஏ.எச்.எம்.பூமுதீன்)

மன்னார் – முசலி பிரதேசத்தின் அரசியல் அதிகாரத்தை ஒழித்துக் கட்டிய பெருமை முன்னாள் எம்பி ஹூனைஸைத் தான் சாரும்.

மன்னார் மாவட்டத்தில் அதிக வாக்கு எண்ணிக்கை கொண்ட பிரதேசம் முசலி. இந்த முசலிக்கு அரசியல் அதிகாரம் மறுக்கப்பட்டு வந்த போதுதான் அமைச்சர் ரிஷாதே முன்வந்து முசலி சார்பாக ஹூனைஸை நிறுத்தி எம்பியாக்கி முசலியையும் கௌரவப்படுத்தினார்.

முசலிப் பிரதேச அபிவிருத்திக் குழு தலைவராகவும் இந்த ஹூனைஸை நியமித்து நல்ல பணிகளை செய்யுமாறும் பணித்தார். எனினும் தனது சகோதரன் ஊடாக ஹூனைஸ் அப்பகுதிக்குச் செய்த அநியாயங்கள் பலரும் அறிந்ததே.

முகா கூட்டத்தில் உரையாற்றிய ஹூனைஸ் அவர்கள், அவர் உட்பட முசலி பிரதேச உறுப்பினர்களின் கை, கால்கள் அமைச்சர் ரிஷாதால் கட்டப்பட்டிருந்தன என்று மிகப் பெரிய பொய்யொன்றை கூறினார்.

அப்படியென்றால் ஹூனைஸ் நகர் , ஹூனைஸ் பாடசாலை என்று பெயர்சூட்டிக் கொள்ள அனுமதி வழங்கியது யார்? அமைச்சர் ரிஷாத் என்றால் மறுக்க முடியுமா?

வடமாகாணசபைத் தேர்தலின் போது மன்னார் மாவட்டம் சார்பாக மூன்று பேர் நிறுத்தப்பட்டனர். அதில் அமைச்சரின் சகோதரரும் ஒருவர். முசலி சார்பாக அலிகான் சரீப் நிறுத்தப்பட்டார். முசலி சார்பான எம்பியாக நான் இருக்கும் போது எதற்கு முசலியில் வேட்பாளர் என்று கேட்டு அமைச்சர் ரிஷாதுடன் நீங்கள் சண்டையிட்டதை நாங்கள் இன்னும் மறக்கவில்லை.

முசலிக்கு வேட்பாளரை உங்களை மீறி ரிஷாத் நியமித்ததன் பின்னர் அவரை தோற்கடிக்க நீங்கள் ஆடிய சுழியோட்டம் எப்படிப்பட்டது என்பது இன்றும் கூட நினைவில் உள்ளது.

இவ்வாறாக முசலியின் அதிகாரத்தை ஒழித்து நாசமாக்கிய உங்களுக்கு, உங்களிடமிருந்த அதிகாரத்தையும் இறைவன் பின்னர் பறித்து இன்னும் முசலியை தண்டித்த முழுப்பொறுப்பையும் நீங்கள் தான் ஏற்கவேண்டும்.

அமைச்சர் ரிசாத் முசலிக்கு செய்த எல்லாவகை உதவிகளையும் இந்த நாடே அறியும். ஊங்களை எம்பியாக்கியதிலிருந்து முசலி மண்ணை வில்பத்து காட்டுக்குள்ளிருந்து காப்பாற்றியது வரை சகல உதவிகளையும் அர்ப்பணிப்புக்களையும் நாடறியும்.

ஆகவே ஹூனைஸ் அவர்கள் நான்காவது கட்சியாக மாறியுள்ள முகாவுக்கும் அதன் தலைமைக்கும் இனியாவது விசுவாசமாக இருப்பதோடு, முசலி மண்ணின் துரோகியாக ரிஷாதை வெளிப்படுத்த நீங்கள் எடுக்கும் எந்தவொரு முயற்சியும் பலனளிக்காது என்பதையும் இங்கு அழுத்தமாக சுட்டிக் காட்டுகின்றோம்.

 

 

 

vanni

By vanni

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *