மன்னார் மாவட்டத்தில் முசலி பிரதேசத்திற்கான பொது விளையாட்டு மைதானம் அமைக்க நிதி ஒதுக்கீடு செய்துள்ள நிலையில் இந்த பொது விளையாட்டு மைதானத்தை அரிப்பு கிராமத்தில் கிறிஸ்தவர்கள் பெரும்பான்மையாக கொண்டுள்ள அரிப்பு கிராமத்தை சேர்ந்தவரும்,தற்போது சிலாவத்துறை கிராம உத்தியோகத்தராக கடமையாற்றுகின்றவர்,பிரதேச செயலக விளையாட்டு உத்தியோகத்தர் மற்றும் பிரதேச செயலக தொழில்நூற்ப உத்தியோகத்தர் ஆகியோர் கடும் முயற்சிகளை மேற்கொள்ளுகின்றார் என பிரதேச மக்கள் விசனம் தெரிவிக்கின்றார்கள்.
இது தொடர்பில் பிரதேச மக்களை தொடர்புகொண்டு வினவிய போது விளையாட்டு மைதானம் தொடர்பான கூட்டம் கடந்த வாரம் பிரதேச செயலகத்தில் இடம்பெற்ற போது சிலாவத்துறை கிராம அதிகாரி,தொழில்நூற்ப அதிகாரி,விளையாட்டு உத்தியோகத்தர்கள் கூறிய விடயம் முசலியில் உள்ள எந்த ஒரு முஸ்லிம் விளையாட்டு கழகங்களும் விளையாட்டு போட்டியில் கலந்துகொள்வதில்லை என்றும்,முஸ்லிம் வீரர்கள் இப்படியான பெறுமதியான மைதானத்தை பராமரிப்பு செய்யமாட்டார்கள் என்றும் தெரிவித்துள்ளார்கள்.
இந்த கிறிஸ்தவ அதிகாரிகள் கருத்தை ஏற்றுக்கொண்டவர்களாக முஸ்லிம் கிராம உத்தியோகத்தர்கள் ஆமோத்திருந்தார்கள் என்றும் அறியமுடிகின்றது. இது போல கடந்த முறை முசலி பிரதேசத்தில் இடம்பெற்ற வட்டார எல்லை நிர்ணய பிரிவில் கூட இந்த முஸ்லிம் கிராம உத்தியோகத்தர்கள் வாய்மூடி மௌனியாகவும்,கடந்த பிரதேச செயலாளர் செ.கேதீஸ்வரன் வழங்கிய சலுகைகளை பெற்றுக்கொண்டு பிரதேச அபிவிருத்தி பற்றி சிந்திக்காமல் சுயநலத்துடன் செயற்பட்டார்கள் எனவும் பிரதேச மக்கள் தெரிவிக்கின்றார்கள்.