தொழில்நூட்பம்பிரதான செய்திகள்

முகநூல் நண்பர்களிடம் எச்சரிக்கை! பரிசுதொகை கிடைக்கும்

முகநூல் ஊடாக அறிமுகமாகும் நண்பர்களிடம் எச்சரிக்கையாக இருக்குமாறு அறிவுறத்தப்பட்டுள்ளது.

முகநூல் நண்பர்களாகி பலவழிகளில் ஏமாற்றி வெவ்வேறு வங்கிக் கணக்குகளுக்கு நிதி வைப்பிடச்செய்யும் மோசடிகள் தொடர்பாக இதுவரை 15 க்கும் அதிக முறைப்பாடுகள் கிடைத்துள்ளன.

இது தொடர்பான விசாரணைகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் காரியாலயம் தெரிவித்துள்ளது.

இலங்கைக்கு வெளிநாடுகளில் இருந்து சுற்றுலா வருபவர்கள் மற்றும் கல்விக்காக வருபவர்கள் முகநூல் உள்ளிட்ட சமூக வலைத்தளங்கள் ஊடாக உள்நாட்டவர்களை நட்பு பாராட்டி இந்த மோசடி நடவடிக்கையில் ஈடுபடுவதாக தெரியவந்துள்ளது.

பலவிதமான முகநூல் முகவரிகளில் இருந்து விடுக்கப்படும் நட்பு அழைப்புகளில் இருந்து பரிசுத்தொகைகள் கிடைக்கப்பெறும் என குறுஞ்செய்திகள் அனுப்பப்படுவதாக குற்ற விசாரணை திணைக்களத்தின் ஆரம்ப விசாரணகளில் இருந்து தெரியவந்துள்ளது.

Related posts

Duties and functions of new Ministers gazetted

wpengine

நாட்டை வெற்றிப்பாதைக்கு இட்டுச் செல்வதில் பங்களிப்பது உழைக்கும் மக்களே – ஜனாதிபதி

Editor

பசில் இந்தியா உடன்படிக்கை! இன்று 40ஆயிரம் மெற்றி தொன் டீசல்

wpengine