Breaking
Sat. Apr 20th, 2024

மன்னார் மாவட்டத்தில் முசலி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட சிலாவத்துறை மீள்குடியேற்ற  திட்ட பகுதியில் அமைக்கபெற்றுள்ள முசலி பிரதேசத்திற்கு சொந்தமான  சந்தை கடந்த பல மாதகாலமாக பராமரிப்பு அற்றநிலையில் இருப்பதாக பிரதேச மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.

கடந்த மஹிந்த ராஜபஷ்ச ஆட்சி காலத்தில் பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் மீள்எழுர்ச்சி திட்டத்தின் ஊடாக பணம் ஓதுக்கீடு செய்து முசலி பிரதேச சபையின் ஊடாக கட்டபட்ட சந்தை இதுவரைக்கும் யாருக்கும் பிரயோசம் இல்லாமல் ஆடு,மாடுகள் உறைவிடமாக தங்கும் கட்டமாக இருந்து வருவதாகவும்,முன்னால் பிரதேச சபையின் தவிசாளர் தன்னுடைய சுயநலத்துக்காக இந்த பகுதியில் கட்டியதாகவும் தெரிவிக்கின்றனர்.0aa09a5d-e9b1-4339-8866-a8fcae320bb0

பல லச்சம் ருபா செலவில் மக்கள் பணத்தில் கட்டபட்ட இந்த கட்டங்களை இதுவரைக்கும் முசலி பிரதேச சபை பராமரிக்காமல் அசமந்த போக்கில் செயற்படுகின்றது, என்றும் இதனை உரிய அதிகாரிகள் கவனம் செலுத்தி இந்த பிரதேசத்துக்குரிய சொத்துகளை பாதுகாக்குமாறும் பிரதேச மக்கள் வேண்டுகோள்விடுக்கின்றனர்.40148f2b-8d7b-46fb-9b2b-aee35669000bd534edbf-a3ff-486f-863c-6b77b66ab585

vanni

By vanni

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *