(அப்துல் மாஹீர்)
பாரம்பரியமாக வடக்கில் வாழ்ந்து புலிகளால்வெளியேற்றப்பட்ட முஸ்லிம்களையும்
தமிழர்களையும்அடிப்படை வசதிகளுடன் மீளக்குடியமர்த்துவதற்காக அரசாங்கத்தினால் உருவாக்கப்பட்டுள்ள செயலணியில் முதலமைச்சர் விக்னேஸ்வரனையும், மரத்தலைவர்ஹக்கீமையும் இணைக்க வேண்டுமென்று முன்னாள் முஸ்லிம் காங்கிரஸ் எம் பி முத்தலிபாபா பாரூக் யாழ்ப்பாணத்தில் தாம் நடாத்திய ஊடகவியலாளர்ச ந்திப்பில் கருத்து வெளியிட்டுள்ளார்.
மன்னாரிலிருந்து அகதியாக வெளியேற்றப்பட்டவர்களில் முத்தலிபாபா பாரூக்கும் ஒருவர். 2004 ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத்தேர்தலில் ஸ்ரீலங்கா முஸ்லிம்காங்கிரஸ் ஐக்கியதேசிய கட்சி இணைந்து வன்னி மாவட்டத்தில் யானை சின்னத்தில் போட்டியிட்ட போது இவர் ஐக்கிய தேசிய கட்சியின் சார்பாக தேர்தலில் போட்டியிட்டு சுமார் 1500 வாக்குகளை பெற்றிருந்தார்.
பின்னர் மர்ஹூம் மஷூரின் மறைவை அடுத்து எம்பியாக அதிர்ஷ்டம் பெற்ற பாரூக் பாராளுமன்றத்திற்குச் சென்று மறு நாளே மு காவில் பல்டி அடித்தார். கடந்த தேர்தலில்
முஸ்லிம் காங்கிரஸின் வரலாற்றில் முதன் முறையாக வன்னி மாவட்டத்தில் அக்கட்சி மண்
கௌவியது. முத்தலிபாபா எம்பியாக இருந்த போது அகதி முஸ்லிம்களுக்காக
எதுவுமே செய்யவில்லை.பெட்டிப்பாம்பாகவே இருந்தார்.
முஸ்லிம்களின் மீள்குடியேற்றத்திற்கு தடையாக இருக்கும் காணிப்பிரச்சினைக்கு
முத்தலிபாபா பாருக்கும் வகை சொல்ல வேண்டும். மன்னார் நகரிலிருந்து கொண்டு
யுத்த காலத்தில் சட்டத்தரணியாக இருந்த இந்த முன்னாள் எம் பி முஸ்லிம்களின் காணிகளை
தமிழர்களுக்கு கள்ள உறுதி போட்டு எழுதி கொடுத்தவர். இவ்வாறான இவர் இன்று சமூகத்திற்காக நீலிக்கண்ணீர் வடிக்கின்றார்.
முஸ்லிம்களின் மீள்குடியேற்றத்திற்கு தடையாக இருக்கும் விக்னேஸ்வரனையும், தனது சொல் அலங்காரங்களால் முஸ்லிம் சமுதாயத்தையும் தமிழ் மக்களையும் கடந்த பதினாறு வருடங்களாக ஏமாற்றிவரும் ஹக்கீமையும் மீள்குடியேற்ற செயலணியில் இணைக்க வேண்டுமென முன்னாள் எம் பி பாரூக் கோருவது வேதனையானது.
அண்மையில் யாழ்ப்பாணத்திற்கு சென்று தமிழர் விடுதலைக் கூட்டணியின் முன்னாள் தலைவர்அமரர் சிவசிதம்பரத்தின் நினைவுக்கூட்டத்தில் கலந்து கொண்டு நினைவுப்பேருரை நிகழ்த்திய முகா தலைவர் ஹக்கீம் வடக்கு முஸ்லிம்களைப்பற்றி ஒரு வார்த்தை கூட தமிழர் மத்தியில்
பேசவில்லை.
அமரர் சிவ சிதம்பரம் வடக்கு முஸ்லிம்கள், அந்தப் பிரதேசத்திற்கு செல்லும் வரை தான் அங்கு செல்வதில்லை என உறுதியுடன் இருந்து மரணித்தவர். இறுதியில் அவரது பூதவுடல் தான்
யாழ்ப்பாணத்திற்கு எடுத்து செல்லப்பட்டது. முஸ்லிம்கள் மீது நேசம் கொண்டிருந்த அவ்வாறான பிரமுகர் ஒருவரின் நினைவுப் பேருரையின் போது கூட ஹக்கீம் முஸ்லிம்களைப் பற்றி ஒரு வார்த்தை தானும் பேசவில்லை.
தமிழர்கள் தன்னை ஒரு நல்ல பிள்ளையாக நினைக்கட்டும் என்று அந்த விடயத்தை தொடாதிருந்த ஹக்கீமை மீளகுடியேற்ற செயலணியில் இணைக்க வேண்டுமென முத்தலிபாபா கோருவது அகதிகளுக்கு செய்யும் துரோகமாகும்.