பிரதான செய்திகள்

மீள்குடியேற்ற செயலணியில் கூட்டமைப்பையும்,காங்கிரஸ்சையும் இணைக்க வேண்டும்.

வடகிழக்கு மாகாணங்களுக்கான மீள்குடியேற்ற செயலணியில் தமிழ்தேசிய கூட்டமைப்பையும், முஸ்லிம் காங்கிரஸையும் இணைத்துக் கொள்வதுடன், வடமாகாண சபையையும் இணைத்துக்கொள்ளுமாறு கோரி வடமாகாண சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

நேற்றைய நடைபெற்ற வடமாகாண சபையின் 124வது சபை அமர்வின்போதே மேற்படி தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இந்த தீர்மானத்திற்கான விசேட கவனயீர்ப்பு ஒன்றை கொண்டுவந்த மாகாணசபை உறுப்பினர் அயூப் அஸ்மின் கருத்து தெரிவிக்கையில்,

“சிங்கள மற்றும் முஸ்லிம் மக்களை மீள்குடியேற்றுவதற்கான செயலணி ஒன்று உருவாக்கப்பட்டது. அந்த செயலணியில் தமிழ் மக்களும் உள்ளீர்க்கப்பட்டு அவர்களும் மீள்குடியேற்றப்பட வேண்டும் என நாங்கள் கேட்டுவந்தோம்.

அதனை பேச்சில் அங்கீகரித்த செயலணி பின்னர் தனியே சிங்கள, முஸ்லிம் மக்களை மட்டும் மீள்குடியேற்றம் செய்து வருகின்றது.

இந்த நிலையை மாற்றியமைக்க தமிழ்தேசிய கூட்டமைப்பையும், முஸ்லிம் காங்கிரஸ் கட்சியையும் மேற்படி செயலணியில் இணைத்துக் கொள்ளவேண்டும்.

அதன் ஊடாகவே தமிழ் மக்களையும் மீள்குடியேற்றுவதற்கான செயலணியாக இந்த செயலணியை மாற்ற இயலும்” என கூறினார்.
தொடர்ந்து கருத்து தெரிவித்த மாகாணசபை உறுப்பினர் ப.சத்தியலிங்கம்,
“அரசியல் கட்சிகளை உள்ளீர்ப்பதனால் மேற்படி செயலணி முன்னர் செய்த தவறுகள் எல்லாவற்றையும் சரி என நாங்கள் ஒத்துக் கொள்வதாக அமையும். ஆகவே வடமாகாணசபையை அதற்குள் உள்ளீர்க்கவேண்டும் என தீர்மானம் எடுங்கள்” என கூறியிருந்தார்.

இதற்கமைய மேற்படி செயலணியில் தமிழ்தேசிய கூட்டமைப்பையும், முஸ்லிம் காங்கிரஸ் கட்சியையும், வடமாகாண சபையையும் உள்ளீர்க்கவேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதுடன், இத்தீர்மானம் பொறுப்புவாய்ந்தவர்களுக்கு அனுப்பிவைக்கப்படவுள்ளது.

Related posts

ஆஸியை சென்றடைந்துள்ளார் ஜனாதிபதி

wpengine

கல்முனை சாஹிரா பாடசாலையின் புதிய செயலாளர்

wpengine

யாழ். விவகாரம்!மாநாட்டிலிருந்து ​அமைச்சர் வெளியேறினார்.

wpengine