அதிகாரங்களையும் பதவிகளையும் தன்னிடமிருந்து அகற்றி தன்னை எப்படியாவது வீட்டுக்கு அனுப்பலாம் என்ற தீய எண்ணத்தில் தொடர்ச்சியாக சதிவேலைகளில் ஈடுபட்டு வருவோர் தமது நடவடிக்கைகளை கைவிட்டு, இருக்கும் அதிகாரங்களை கொண்டு சமூகத்திற்கு உருப்படியானப் பயனை பெற்றுக்கொடுப்பது பற்றி சிந்திக்க வேண்டும் என்று அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.
மன்னாரமுது அஹனப் எழுதிய “நவரசம்”; கவிதை நூல் வெளியீட்டு விழா பண்டாரவெளி முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் இடம்பெற்ற போது பிரதம அதிதியாக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் கலந்து கொண்டார்.
அவர் மேலும் கூறியதாவது,
மன்னார் மாவட்டத்தில் குறிப்பாக முசலி பிரதேசத்தில் நாம் எந்தவிதமான அபிவிருத்திகளை மேற்கொள்ளவில்லை என்று இன்னுமே கூறிக்கொண்டு திரிவோர் இந்தப் பிரதேசத்தில் நடைபெற்றிருக்கும் நடைபெற்றுக் கொண்டிருக்கும் அபிவிருத்தியை யார் தான் செய்கிறார்கள் என்றேனும் கூறமுடியுமா? வெறுமனே என்னை குற்றஞ்சாட்டுவதற்காக, என்னை வீழ்த்துவதற்காக, என்னை அதிகாரத்தில் இருந்து துரத்துவதற்காக வேண்டுமென்றே குறைகளையும் இட்டுக்கட்டப்பட்ட கதைகளையும் கூறிக்கொண்டு இருப்பதில் அவர்களுக்கு என்ன இலாபம் கிடைக்கின்றது.
யுத்தத்தின் பின்னர் சீரழிந்து போய்க்கிடந்த இந்தப் பிரதேசத்தை பூச்சியத்திலிருந்து ஆரம்பித்து மீளக்கட்டியெழுப்பினோம்.
L
மாணவர்களின் கல்வித் தேவை கருதி ஏக காலத்தில் சிலாபத்துறை, பண்டாரவெளி, தாராபுரம், எருக்கலம்பிட்டி, தலைமன்னார் உட்பட 10பாடசாலைக்கு அப்போதைய வடக்கு ஆளுனரின் உதவியுடன் 2மாடிக் கட்டிடங்களை வழங்கினோம்.
என்னை நியாயப்படுத்தவும் காடழிப்பு சமூகம் என முஸ்லிம் சமூகத்தின் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்களையும் மறுதழிக்க தனியார் தொலைக்காட்சியில் வாதிட வேண்டிய நிப்பந்தம் எனக்கு ஏற்பட்டது.