பிரதான செய்திகள்

மீள்குடியேறும் முஸ்லிம்களுக்கு காணி வழங்க வேண்டும்! காணி மதிப்பிட்டிற்கான செயலணி எங்கே?

யாழ்ப்பாணத்தில் மீள்குடியேறுவதற்கான காணி இல்லாத முஸ்லீம் மக்களுக்கு காணிகளை பெற்றுக்கொடுக்க வேண்டும் என யாழ் முஹம்மதியா ஜும்மா பள்ளிவாசல் நிர்வாக தலைவரும் ஐ.தே.கட்சியின் முக்கியஸ்தருமான எம்.ஏ.சி முபீன் தெரிவித்தார்.

காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலையை அண்மித்தப் பகுதியில் காணி வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் நாகலிங்கம் வேதநாயகன் ஊடகங்களுக்கு தெரிவித்த கருத்துக்கு அமைவாக மேற்குறித்த கருத்தினை அவர் தெரிவித்தார்.

1990 ஆண்டு வாழ்ந்த முஸ்லீம் மக்கள் விடுதலை புலிகளினால் விரட்டியடிக்கப்பட்டதன் பின்னர் தற்போது குடியேறி வருகின்றனர்.ஆனால் அவர்களிற்கு குடியேறி வாழ காணிகள் பற்றாக்குறை உள்ளது.எனவே ஏனையோருக்கு பகிர்ந்தளிக்க அரசாங்க அதிபர் வலி வடக்கு பகுதியில் உள்ள சில காணிகளை அடையாளம் கண்டு அறிவித்துள்ளார்.

இதில் அமைச்சரவை அனுமதி கிடைக்கபெற்ற பின்னர் காணியில்லாத குடும்பங்களுக்கு தலா 2 பரப்பு என்ற அடிப்படையில் காணி வழங்கப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

எனவே தான் புத்தளம்ஏனைய பகுதிகளில் தற்காலிக இடைத்தங்கல் முகாம்களில் அதிகமான முஸ்லீம் மக்கள் வாழ்ந்து வருகின்றனர். அவர்களில் 500க்கு அதிகமான குடும்பங்கள் நிரந்தரமாக காணி இல்லாதவர்கள் .எனவே அம்மக்களையும் உள்வாங்கி தற்போது விடுவிக்கப்பட்டுள்ள காணிகளில் மீள்குடியேறுவதற்கான வேலைத்திட்டம் ஒன்றினை செயற்படுத்தி இடம்பெயர்ந்த முஸ்லீம் மக்களையும் மீளக் குடியமர்த்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மேலும் கடந்த காலங்களில் உருவாக்கப்பட்ட காணி மதிப்பிட்டிற்கான செயலணி தற்போது செயலிழந்து காணப்படுவதாகவும் இதனை உடனடியாக செயற்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் என அவர் மேலும் கேட்டுக்கொண்டார்.

Related posts

கிராம உத்தியோகத்தர்கள் தொழில் சங்க போராட்டம்

wpengine

முசலி சமுர்த்தி வங்கி முகாமையாளர் மீது குற்றச்சாட்டு! விசாரணை ஆரம்பம்

wpengine

வாகன வருமான அனுமதிப்பத்திரம் குறித்து வெளியான அறிவிப்பு!

Editor