பிரதான செய்திகள்

மீலாத் விழா இன்று யாழ்ப்பாணத்தில்

2017ம் ஆண்டிற்கான தேசிய மீலாத் விழா நிகழ்வுகள் இன்று யாழில் கோலாகலமாக நடைபெற்றது. 

2017ம் ஆண்டிற்கான தேசிய மீலாத் விழா நிகழ்வில் அதன் ஞாபகார்த்தமாக முத்திரை ஒன்றும் உத்தியோகபூர்வமாக வெளியிட்டு வைக்கப்பட்டது.

இதன்போது பிரதம விருந்தினர் பாராளுமன்ற சபாநாயகர் கரு ஜெயசூரிய மற்றும் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் மற்றும் தபால் அமைச்சர் எம். எச். எம். ஹலீம் ஆகியோர் இணைந்து வெளியிட்டு வைத்தனர்.

ரூபா 15 பெறுமதியான இம்முத்திரையில் யாழ்ப்பாணம் முகமதியா ஜும்மா பள்ளிவாசலின் முகத்தோற்றம் (புதுப்பள்ளி) அச்சிடப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் ஒஸ்மானியாக் கல்லூரி வளாகத்தில் ஆரம்பமான இந்நிகழ்வில், பாராளுமன்ற சபாநாயகர் கரு ஜெயசூரிய மற்றும் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் மற்றும் தபால் அமைச்சர் எம். எச். எம். ஹலீம், வர்த்தக வாணிப அமைச்சர் றிசாட் பதியுதீன், இராஜாங்க அமைச்சர் ஏ.எச்.எம். பௌசி, தமிழரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா, வடமாகாண ஆளுனர் ரெஜினோல்ட் குரே உட்பட பாராளுமன்ற உறுப்பினர்கள், அரச அதிகாரிகள் என பலர் கலந்து சிறப்பித்தனர்.

Related posts

மோடி இலங்கை முஸ்லிம்களுடன் மோத போகுறாரா?

wpengine

இந்தியா 1பில்லியன் டொலர் கடன்! மருந்துக்கள் இறக்குமதி

wpengine

எங்கோ ஓரிடத்தில் தவறு நடந்துள்ளது! மீண்டும் ஒரு முறை செல்லும் நோக்கம் தனக்கு இல்லை

wpengine