செய்திகள்பிரதான செய்திகள்

மீன் பிடித்துக் கொண்டிருந்த போது காணாமல் போன மீனவர் சடலமாக..!

மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பாலமுனை நடுத்துறை கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்த போது தவறி விழுந்து காணாமல் போன மீனவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர் 

நேற்றிரவு கடலுக்கு மீன்படிக்கச் சென்ற மேற்படி மீனவர் இன்று அதிகாலை 3 மணியளவில் மீன்பிடித்து விட்டு படகின் ஒரு பகுதியில் ஓய்வெடுத்துக் கொண்டிருந்த போது தவறி விழுந்து காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது .

பாலமுனையைச் சேர்ந்த குடும்பஸ்தரான 59 வயதுடைய ஷாகுல் ஹமீத் முஹம்மத் பஷீர் என்பவரே இவ்வாறு காணாமல் போயுள்ளார்.

காணாமல் போன குறித்த மீனவரை தேடும் பணிகள் பாலமுனை மற்றும் பூநொச்சிமுனை கடல் பிரதேசங்களில் மேற்கொள்ளப்பட்ட நிலையில் இன்று மதியம் காத்தான்குடி கடல் பிரதேசத்தில் சுழியோடிகளால் இவரது சடலம் மீட்கப்பட்டது.காத்தான்குடி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

Related posts

5 மாதங்களில் 2 மெற்றிக் தொன் ஹெரோயின் மற்றும் ஐஸ் போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளது.

Maash

மின்சாரக் கட்டண குறைப்போடு ஒப்பிட்டு, நீர் கட்டணமும் குறைப்பு . !

Maash

தேசிய அடையாள அட்டை வினியோகம் அதிகரிப்பு

wpengine