பிரதான செய்திகள்

மீன் சாப்பிட்டால் நன்மை பயக்கும்

கடல் வகை உணவான மீன் சாப்பிட்டால் நன்மை பயக்கும் என்று தெரிந்திருப்பீர்கள்.

ஆனால், எதன் காரணமாக உங்கள் உடலுக்கு நன்மை கிடைக்கிறது என்பதை அறிந்துகொண்டு சாப்பிடுங்கள்.

மட்டன் சிக்கன் உணவுகளை விட கடல் உணவான மீனில், சாச்சுரேட் கொழுப்பு உள்ளதால் இது உடல் எடையை அதிகரிக்காது.

மேலும் உடல் ஆரோக்கியத்திற்கு தேவையான பேட்டி ஆசிட்களான ஒமேகா 3 உள்ளது, இதனால் உடலுக்கு நல்ல ஆற்றல் கிடைப்பதோடு மட்டுமல்லாமல், டயட்டில் இருப்போருக்கு உகந்த ஒன்றாகும்.

சமீபத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆராய்ச்சியில் மீன் சாப்பிடுவதால் இதய நோய்கள் குணமாகும் என தெரியவந்துள்ளது.

குறிப்பாக tuna, salmon, sardines, swordfish, mackerel போன்ற மீன்களில் அதிகளவில் ஒமேகா 3 நிறைந்துள்ளதால், இதனை சாப்பிடுமாறு மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர்.

இதய நோயால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு கடந்த 3 வருடங்களாக 2 அல்லது மூன்று துண்டு மீன்களை இரவில் சாப்பிடுமாறு பரிந்துரைக்கப்பட்டது.

இதன் முடிவில் அவர்கள் இதய நோயில் இருந்து குணமாகியுள்ளது என தெரியவந்துள்ளது.

அதுமட்டுமின்றி ஆஸ்டியோபோரோசிஸ்(osteoporosis) மற்றும் தொற்றுநோய் தாக்கம், சிறுநீரக புற்றுநோய், பெருங்கடல் புற்றுநோய் போன்றவற்றில் இருந்து பாதுகாக்கிறது.

குறிப்பாக மீன் உணவு, மூளைக்கு சிறந்த உணவு என கூறப்படுகிறது, வாரத்திற்கு ஒருமுறையாவது உணவுடன் மீனை சேர்த்துக்கொண்டால், மூளை வளர்ச்சி குறைபாடு 10 சதவிகிதம் முதல் 13 சதவிகிதம் வரை குறையும்.

அதுமட்டுமின்றி மீனில், Sodium, Potassium, Protein, Vitamin A Vitamin C Calcium, Vitamin D, Vitamin B-6, Vitamin B-12 Magnesium போன்ற சத்துக்கள் அடங்கியுள்ளன.

மேலும், கண்பார்வை குறைபாடு, தைராய்டு பிரச்சனை உள்ளவர்கள் மீனை வாரத்திற்கு இருமுறையாவது எடுத்துக்கொள்ளவும்.

Related posts

SLEAS நேர்முகப் பரீட்சைக்கு 112 பேர் தகுதி! சிறுபான்மையினர் ஐவர் மட்டுமே!

wpengine

பரீட்சைப்பெறுபேறுகள் பரீட்சார்த்திகளுக்கு அனுப்பப்படுமா ? ஜனாதிபதி,பிரதமர் கவனம் செலுத்த வேண்டும்

wpengine

Fight Cancer – Awareness program at BMICH

wpengine