செய்திகள்பிரதான செய்திகள்

மீனின் கொம்பு வயிற்றுப் பகுதியில் குத்தியதில் மீனவர் மரணம்..!

மட்டக்களப்பு, வாழைச்சேனை துறைமுகத்திலிருந்து ஆழ்கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற மீனவர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர்.

மரணமடைந்த நபரின் சடலம் ஞாயிற்றுக்கிழமை (29) இரவு வாழைச்சேனை துறைமுகத்துக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

இந்த விடயம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

கடந்த 24 ஆம் திகதி வாழைச்சேனை துறைமுகத்திலிருந்து ஆழ்கடலுக்கு மீன்பிடிக்க மூன்று பேருடன் சென்ற மீனவர் ஒருவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

மீன் பிடித்துக் கொண்டிருந்த போது வலையில் சிக்கிய கொப்புரு மீனை இயந்திரப் படகில் ஏற்றுவதற்க்கு முயற்சித்த போது மீனின் கொம்பு வயிற்றுப் பகுதியில் குத்தியதில் அவர் காயமடைந்துள்ளார்.

காயமடைந்த நபரை ஏனைய மீனவர்கள் கரைக்கு கொண்டு வரும் போதே உயிரிழந்துள்ளார்.

இவ்வாறு உயிரிழந்தவர் பிறைந்துறைச்சேனை பகுதியை பிறப்பிடமாகவும், பாலைநகர் பகுதியை வசிப்பிடமாகவும் கொண்ட 47 வயதுடையவர் ஆவார்.

மரணமடைந்த நபரின் உடல் பிரேத பரிசோதனைக்காக வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை வாழைச்சேனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts

முஸ்லிம்களில் ஒரு சிலரின் தவறான செயற்பாடு! விமர்சனங்கள் எழுந்துள்ளன அமைச்சர் றிஷாட்

wpengine

தியாகங்கள் மூலமே வெற்றிகள் கிட்டும்! அமைச்சர் றிசாத்

wpengine

பட்டமளிப்பு விழாவில் அமைச்சர் றிஸாட் பதியுதீன்

wpengine