(செய்தியாளர் ஆ.பிரபுராவ் இராமேஸ்வரம்)
மீனவர்களையும் படகுகளையும் விடுவிக்க வழியுறுத்தி ராமேஸ்வரத்தில் வேலைநிறுத்தம் ஆர்பாட்டம் உண்ணாவிரதம் உள்ளிட்ட தொடர் போராட்டங்கள் அறிவிப்பு ராமநாதபுரம் ஜீலை 19 ராமேஸ்வரம் மீனவர்கள இரண்டு அம்சக்கோரிக்கைகளை வழியுறுத்தி பல் வேறு போராட்டங்களை இன்று அறிவித்தள்ளனர்.
இன்று ராமேஸ்வரம் துறைமுகத்தில் மீனவப்பிரதிநிதிகளின் அவசர ஆலேசனைக்கூட்டம் நடைபெற்றது இதில் இலங்கை கடற்படையினரின் தொடர்தாக்குதல் மற்றும் கைது நடவடிக்கைளுக்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டது மேலும் சிறைபிடிக்கப்பட்ட 77 மீனவர்களையும் 111 விசைபடகுகளையும் விடுதலை செய்யவேண்டும என்ற கோரிக்கைகளை வழியுறுத்தி வரும் 22 ந் தேதி முதல் காலவரம்பற்ற வேலை நிறுத்தப்போராட்டத்தில் ஈடுபட உள்ளதாகவும் அடுத்தகட்டமாக வரும் 26 ந் தேதி ராமேஸ்வரம் பேரூந்துநிலையம் எதிரே கண்டன ஆர்பாட்டம் நடத்தவது எனவும் இதற்க்கும் அரசு நடவடிக்கை இல்லையெனில் 28 ந் தேதி முதல் சாகும்வரை உண்ணாநிலை போராட்டத்தில்ஈடுபடுவது எனவும் தீர்மாணம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
மேலும் தொடர்போராட்டங்களுக்கு தமிழகத்திலுள்ள விசைபடகுகள் மற்றும் நாட்டுபடகு மீனவர்களின் ஆதரவை பெற்று தமிழகம் தழுவிய தொடர்போராட்டங்கள் நடத்தவது எனவும் ஆலோசணைக்கூட்டத்தில் பங்கேற்ற மீனவ சங்க பொறுப்பாளாகள் தெரிவித்துள்ளனர்
பேட்டி அல்போன்ஸ் தலைவர் மாவட்ட விசைபடகு மீனவர்சங்கம் பேட்டி எமரால செயலாளர் மாவட்ட விசைபடகு மீனவர்சங்கம்