பிரதான செய்திகள்

மீண்டும் வைத்தியசாலையில் ஞானசார தேரர்

பொதுபலசேன அமைப்பின் பொதுச்செயலாளர் வணக்கத்துக்குரிய கலகொடஹத்தே ஞானசார தேரர் இன்று பிற்பகல் மீண்டும் ஶ்ரீ ஜயவர்தன புர மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

வெலிகடை சிறைச்சாலையில் இருந்து மாதாந்த சிகிச்சைக்காக அவர் இன்று மருத்துவமனைக்கு சென்ற போது தேரரை மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்குமாறு மருத்துவர்கள் பரிந்துரைத்துள்ளனர்.

இதேவேளை, சந்தியா எக்னெலிகொடவை தூற்றி அச்சுறுத்திய சம்பவம் தொடர்பில் வழங்கப்பட்ட ஆறு மாத சிறைத்தண்டனைக்கு எதிராக ஞானசார தேரர் ஹோமாகம மேல்நீதிமன்றில் தாக்கல் செய்திருந்த மேன்முறையீட்டு மனு மீதான விசாரணை எதிர்வரும் மாதம் 4ம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

Related posts

கம்பெரலிய திட்டத்தை நிறுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

wpengine

சட்டத்தை நீக்குமாறு கோரி மன்னாரில் கையெழுத்து! அஹ்னாப் ஜஸீமும் கையெழுத்து

wpengine

நாட்டின் பல பாகங்களிலும் நேற்று தலைபிறை

wpengine