பிரதான செய்திகள்

மீண்டும் மின் கட்டணம் அதிகரிக்க நடவடிக்கை- அமைச்சர் காஞ்சன விஜேரத்ன

மின் கட்டணத்தை அதிகரிக்குமாறு இலங்கை மின்சார சபை விடுத்த கோரிக்கைக்கு பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் அனுமதி கிடைத்துள்ளது.

நேற்றிரவு (25) தொலைக்காட்சியில் ஒளிபரப்பான நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மின்வலு மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேரத்ன இதனை தெரிவித்துள்ளார்.

இருந்த போதிலும் அது சரியான முறையில் அமுல்படுத்தப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

இலங்கை மின்சார சபையின் நாளாந்த இழப்பு சுமார் 500 பில்லியன் ரூபாவாகும் என தெரிவித்த அவர், இப்போது நாம் செய்ய வேண்டியது, உற்பத்தி செலவுக்கு ஏற்ற விலை சூத்திரத்தை அறிமுகப்படுத்துவதுதான் என தெரிவித்துள்ளார்.

இதேவேளை, எரிபொருள் விலை திருத்தம் எதிர்காலத்தில் விலை சூத்திரத்தின் கீழ் மேற்கொள்ளப்படும் என அமைச்சர் காஞ்சன விஜேரத்ன தெரிவித்துள்ளார்.

Related posts

இலங்கை கவிஞர் அனாருக்கு ‘2017- கவிஞர் ஆத்மாநாம்’ விருது

wpengine

விக்ரமசிங்க ஊடகங்களுக்கு அச்சுறுத்தல் – நாமல் ராஜபக்ஷ

wpengine

எவரஸ்ட் மலை ஏறிய இலங்கை பெண்! பிரதமர் வாழ்த்து

wpengine