பிரதான செய்திகள்

மியன்மார் முஸ்லிம்களுக்காக யாழ்ப்பாணத்தில் போராட்டம்! ஐ.நா.வில் மகஜர்

மியன்மார் நாட்டில் ரோஹிங்யா முஸ்லிம்கள் மீது மேற்கொள்ளப்பட்டுவரும் தாக்குதலை கண்டித்து வடகிழக்கு ஒருங்கிணைப்பு குழுவின் ஏற்பாட்டில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று நடத்தப்பட்டுள்ளது.

இன்று தினம் காலை 11 மணிக்கு யாழ். கைலாய பிள்ளையார் கோவிலுக்கு அருகில் இந்த கவனயீர்ப்பு போராட்டம் நடத்தப்பட்டது. போராட்டத்தின் நிறைவில் நாவலர் வீதியில் உள்ள ஜ.நா அலுவலகத்தில் மகஜர் கையளிக்கப்பட்டுள்ளது.

தமிழ், சிங்கள, முஸ்லிம் மக்கள் இணைந்து முன்னெடுத்த இந்த போராட்டத்தில், பல மாவட்டங்களில் இருந்தும் பெருமளவிலானோர் கலந்து கொண்டிருந்தனர்.

படுகொலைகளை நிறுத்தி பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிதியைப் பெற்றுக் கொடுக்க ஐ.நா சபை ஆணையாளர் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென போராட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்கள கோரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

நடிகை நயன்தாராவுக்கு ஆதரவாக மு.க.ஸ்டாலின் கண்டனம்

wpengine

மட்டக்களப்பு சமுர்த்தி மாதிரி கிராம வேலைத்திட்டம்

wpengine

Rishad’s wife writes to the President

wpengine