மன்னார் மாவட்ட பொது அமைப்புக்களின் ஒன்றிய தலைவர் வி.எஸ்.சிவகரன் தலைமையில் மன்னார் மாவட்டச் செயலகத்திற்கு முன் காலை 10.30 மணியளவில் இப்போராட்டம் இடம் பெற்றது.
மியன்மாரில் ரோஹிங்கியா முஸ்ஸிம் மக்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்டு வரும் மனிதாபிமானமற்ற மிருகத்தனமான செயற்பாட்டை வன்மையாக கண்டித்தும், இனச்சுத்திகரிப்பு செயற்பாட்டை கண்டித்தும், அந்த மக்களின் வாழ்வுரிமையினை பாதுகாக்கும் வகையிலும், சர்வதேசத்திற்கு அழுத்தத்தினை கொடுக்கும் வகையில் குறித்த போராட்டம் இடம்பெற்றது.
குறித்த போராட்டத்தில் மன்னார் மாவட்ட குரு முதல்வர் அருட்தந்தை அன்ரனி விக்டர் சோசை அடிகளார், வடமாகாண சுகாதார அமைச்சர் வைத்திய கலாநிதி ஜீ.குணசீலன், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஹுனைஸ் பாரூக், ஈ.பி.ஆர்.எல்.எப். அமைப்பின் மாவட்ட அமைப்பாளர் எஸ்.ஆர்.குமரேஸ், மன்னார் நகர சபையின் முன்னாள் உறுப்பினர் என்.நகுசீன், மன்னார் பிரதேச சபையின் முன்னாள் தலைவர் மாட்டீன் டயஸ், மன்னார் சமாதான அமைப்பின் தலைவர் பி.ஏ.அந்தோனி மார்க் ,பெண்கள் அமைப்பின் பிரதிநிதிகள், பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் உட்பட சுமார் நூற்றுக்கணக்கான மக்கள் கலந்து கொண்டிருந்தனர்.
குறித்த போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் மியன்மாரில் ரோஹிங்கிய முஸ்ஸிம் மக்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்டு வரும் மனித குலத்திற்கு எதிரான செயற்பாடுகளை கண்டிக்கும் வகையிலும், ஐ.நா மனித உரிமைகள் பேரவைக்கும், மனித உரிமைகள் அமைப்புகளுக்கும் அழுத்தத்தை கொடுக்கும் வகையிலும் பதாதைகளை ஏந்தியவாறு ஈடுபட்டமை குறிப்பிடத்தக்கது.