பிரதான செய்திகள்

மியன்மார் அரசாங்கத்திற்கு எதிராக மீராவோடை ஜூம்ஆ பள்ளிவாயலினால் கண்டனப் பேரணி

(எம்.ரீ. ஹைதர் அலி)
மட்டக்களப்பு மாவட்டத்தின், கோறளைப்பற்று மேற்கு பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள மீராவோடை மீராஜூம்ஆ பள்ளிவாயலின் பரிபாலன சபையினால் ஏற்பாடு செய்யப்பட்ட மியன்மார் ரோஹிங்யா முஸ்லிம்கள் படுகொலை செய்யப்படுவதை கண்டித்து நடாத்தப்பட்ட மாபெரும் கண்டனப் பேரணி 2017.09.08ஆந்திகதி-வெள்ளிக்கிழமை ஜூம்ஆத் தொழுகையின் பின்னர் பதாதைகளை ஏந்தியவாரு அமைதியான முறையில்  நடைபெற்றது.

இக்கண்டனப் பேரணியில் பிரதேச பள்ளிவாயல்கள், சமூக சேவை நிறுவனங்கள், விளையாட்டுக் கழகங்கள், இளைஞர் கழகங்கள் மற்றும் பிரதேசத்திலுள்ள பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டு தங்களது எதிர்ப்புக்களை வெளிக்காட்டினர்.
இறுதியில் கோறளைப்பற்று மேற்கு பிரதேச செயலகத்தின் நிருவாக உத்தியோத்தர் மற்றும் கிராம சேவை உத்தியோகத்தர் ஆகியோரிடம் மீராஜூம்ஆ பள்ளிவாயல் பரிபாலன சபையினரால் மகஜர் ஒன்றும் கையளிக்கப்பட்டது.

Related posts

முஸ்லிம்களின் பிரச்சினை! 9நாட்டு தூதுவர்களிடம் முறைப்பாடு

wpengine

இன்று தொழிலாளர் தினம்

wpengine

சாய்ந்தமருதில் அரசியல் கட்சிகளின் செயற்பாடுகளுக்கு தடை; பிரகடனம் நிறைவேற்றம்

wpengine