பிரதான செய்திகள்

மியன்மார்,கல்கிசை சம்பவம்! ஒருவர் கைது

கல்கிஸையில், மியன்மார் அகதிகளுக்கான தங்குமிடத்துக்கு முன் நின்றபடி ஒழுங்கீனமான நடந்துகொண்ட நபர் ஒருவரை குற்றத்தடுப்புப் பிரிவு பொலிஸார் கைது செய்தனர்.

 

மியன்மாரில் இருந்து அகதிகளாக இடம்பெயர்ந்த அகதிகள் சிலரை கடற்படையினர் மீட்டுவந்து கல்கிஸையில் உள்ள மியன்மார் அகதிகளுக்கான தங்குமிடத்தில் வைத்திருந்தனர்.

அப்போது, திடீரென பிக்குகள் சகிதம் அங்கு திரண்ட ஒரு கும்பல் மியன்மார் அகதிகளை வெளியேற்றுமாறும், அவர்களுக்கு இலங்கையில் இடமில்லை என்றும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதையடுத்து அவ்வகதிகள் தற்காலிகமாக பூஸா சிறையில் தங்க வைக்கப்பட்டனர்.

இந்நிலையில், குறித்த நபர் மியன்மார் அகதிகளுக்கான தங்குமிடத்துக்கு முன் நின்றபடி கடுமையாக நடந்துகொண்டார்.

இதையடுத்து குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸார் அவரைக் கைது செய்தனர்.

Related posts

ஊடகவியலாளர்களுக்கு இடையூறு! அமைச்சர் றிசாட் தீர்த்து வைக்க நடவடிக்கை

wpengine

காதலுக்காக மதம் மாறிய முஸ்லிம் பெண் சமூக வலைதளத்தில் வைரல்

wpengine

க.பொ.த உயர்தரப் பரீட்சை நாளை (07) ஆரம்பமாகவுள்ளது.

wpengine