செய்திகள்பிரதான செய்திகள்

மியன்மாரில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 2 பெண்கள் உட்பட 13 பேர் மீட்கப்பட்டுள்ளன .

மியன்மாரில் உள்ள சைபர் குற்ற முகாம்களில் பலவந்தமாக தடுத்து வைக்கப்பட்டிருந்த 13 இலங்கையர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர்.  இவ்வாறு விடுவிக்கப்பட்டவர்களில் 11 ஆண்களும் இரண்டு பெண்களும் அடங்கியுள்ளனர். 

அவர்கள் 20 முதல் 30 வயதுக்குட்பட்டவர்கள் என தெரிவிக்கப்படுகிறது. அவர்கள் தற்போது பாதுகாப்பாக இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

அவர்கள் தாய்லாந்து எல்லையிலிருந்து பாங்கொக்கில் உள்ள இலங்கை தூதரகத்திற்கு அழைத்துச் செல்லப்படவுள்ளனர்.  பின்னர் அவர்கள் இலங்கைக்கு அழைத்து வரப்படவுள்ளனர். 

இதற்கிடையில், ஏனைய நால்வரும் மியன்மாரில் தனித்தனி சைபர் கிரைம் முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.  அவர்களை விரைவில் மீட்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக வெளியுறவு அமைச்சின் தகவல்கள் தெரிவிக்கின்றன. 

வெளியுறவு அமைச்சர் விஜித ஹேரத் அண்மையில் தாய்லாந்து வௌியுறவு அமைச்சர் மற்றும் மியன்மார் துணைப் பிரதமருக்கும் இடையிலான பேச்சுவார்த்தைகளின் போது, ​​சைபர் குற்ற முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இலங்கையர்களை மீட்பதற்கான உதவியை கோரியிருந்தார். இதன் விளைவாக, குறித்த இலங்கையர்கள் மீட்கப்பட்டுள்ளனர்.

Related posts

வக்காளத்து வாங்குவதற்கு தானும் ஒரு ஜனாதிபதி வேட்பாளர்! ஹிஸ்புல்லாஹ் மீது ஹக்கீம்

wpengine

மாந்தை மேற்கு பிரதேச பிரிவில் மூன்று கிராமங்கள் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்காக தெரிவு.

Maash

வன்னி பல்கலைக்கழகம் கோரி மாபெரும் பேரணி

wpengine