பிரதான செய்திகள்

மின் வெட்டும் பயங்கரவாத செயல்களும்

கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று நாடு முழுவதும்  இருளில் மூழ்கக் காரணமாகவிருந்த சம்பவமானது உண்மையிலேயே சதியாக இருக்குமானால் அதனை பயங்கரவாத செயலாகவே நினைக்கிறது  வேண்டியுள்ளது.

கடந்த ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் இரண்டு மணியிலிருந்து ஏற்பட்ட மின் துண்டிப்பானது நாடெங்கும் மீண்டும் சரி செய்வதற்கு இரவாகி விட்டது..

அன்றைய மின்துண்டிப்புக்கான காரணத்தைக் கண்டறிவதற்காக அரசாங்கத்தின் கடும் பணிப்புரையின் பேரில் தீவிரமான விசாரணைகள் பல்வேறு கோணங்களில் முன்னெடுக்கப்பட்டுள்ளன. அதே போல் மின்சார சபையின் தலைவர் அவரின் பதவியையும் ராஜனாமா செய்யவும் தயாரானார் அதே பொல் உடனடியாக

மின்சக்தி மற்றும் புதுப்பிக்கத்தக்க சக்தி அமைச்சும் பொலிஸ் திணைக்களமும் இதுவரை மேற்கொண்ட விசாரணைகளை அடிப்படையாக வைத்துப் பார்க்கும் போது, அன்றைய மின்துண்டிப்புக்கு சதிநாச வேலையே காரணமாகவும் 3௦ வருட பழைய மின்மாற்றிகள்       (ட்ரான்ஸ் ஃபோமர்) பழுதடைந்ததானால் இதற்று காரணம் என்று  தகவல்கள் வெளியிடுகின்ன்றது

இவ் உஷ்ண காலப் பகுதியில் மின் துண்டிப்பை ஏற்படுத்தி, மக்களை அவஸ்தைக்கு உள்ளாக்குவதன் மூலம் அரசு  மீது வெறுப்பை உண்டாக்குவதற்கு தீய சக்திகளின் நாச செயற்பாடுகள் காரணமாக சந்தேகிப்பதற்கு இடமிருக்கிறது.

இல்லை என்றால் நாட்டில் சிவில் நிர்வாகத்தைச் சீர்குலைப்பதன் மூலம் மக்கள் இடையே அரசுக்கு விரோதமான சக்திகள் முற்படுவதாகவும் சந்தேகம் காணப்படுகிறது.

எவ்வாறாயினும் இதுபோன்ற தீய  செயல்களுக்கு அரசியல் காரணங்களைத் தவிர வேறெந்த நோக்கமும் இருப்பதற்கு இடமில்லை. மின்சார விநியோகத்தைத் துண்டிப்பதென்பது நாட்டின் சிவில் சமுகத்தை முழுமையாக முடக்கி விடுமென்பது தெரியாத விடயமல்ல .

இந் நாட்டில் யுத்தம் நடந்த காலப் பகுதியில் வட கிழக்கில் விடுதலை புலிகளும் இதை தான்  செய்தனர். மின்மாற்றிகள் (ட்ரான்ஸ் ஃபோமர்) காணப்பட்டனவோ அவற்றை எல்லாம் குண்டுகளை வைத்துத் தகர்த்து மின்சார விநியோகத்தையே முதலில் தடுத்தனர்  புலிகள். வட கிழக்கில் சிவில் நிறுவாகத்தைச் சீர்குலைக்க வேண்டுமென்பதே புலிகளின் அன்றைய எண்ணமாக  இருந்தது.

அதேவிதமான அரச விரோத செயற்பாடுதான் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடந்த சம்பவமாக இருக்க வேண்டும் என மக்கள் மத்தியில் சந்தேகத்தை உருவாக்கிறது .

வட கிழக்கில் இடம்பெற்றதைப் போன்ற தீய செயற்பாடுகளை, ஆரம்பிப்பதற்கு எந்தவொரு தரப்பினரும் முன்வருவார்களாக இருந்தால் அது மிகவும் பாரதூரமாகக் கருதப்பட வேண்டியதாகும்.

மின்சார துண்டிப்பு சதி வேலைக்குக் காரணமானோரைக் கண்டுபிடித்து, பிரச்சினையை ஆரம்பத்திலே தடுக்க வேண்டியது அரசின் பொறுப்பாகும். கடந்த அரசின் பொது 2 நிமிடம் மின் தடை ஏற்பட்டதற்று தற்போதைய பிரதம் ஒரு ஊடக அறிக்கையை விட்டதும் குறிபிடப்பட்டுள்ளது

கடந்த ஞாயிற்றுக்கிழமைக்குப் பின்னரும் நாட்டில் சிறிய அளவிலான மின் துண்டிப்புகள் இருப்பதால் பரபரப்பாகப் பேசப்படுகிற விடயமாகும்

ஜனாதிபதியும் பிரதமரும் தீவிர கவனமெடுத்திருப்பதைக் காண குடியதாக உள்ளது வெளிநாட்டு உதவியை இது தொடர்பில் நாடுவதற்கும் அரசாங்கம் நடவடிக்கைகள் எடுத்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது

Related posts

“கோ” என சொல்லும் போதே ஒரே நேரத்தில் நாடு முழுவதிலும் பட்டாசு கொளுத்தி கொண்டாட வேண்டும்

wpengine

கருணா கொலைகளை செய்தது மாத்திரமன்றி வரலாற்று கொலைகளை செய்தார்.

wpengine

“கிராமத்து பொலிஸ்” நடமாடும் சேவை இன்று மன்னாரில்

wpengine